தமிழகம்

குரங்குடன் நடிகர் விக்ரம் வெளியிட்ட வீடியோ: மு.க.முத்து வீட்டில் வனத்துறை விசாரணை

செய்திப்பிரிவு

சென்னை: தடை செய்​யப்​பட்ட குரங்கை கையில் வைத்து நடிகர் விக்​ரம் வெளி​யிட்ட வீடியோ தொடர்​பாக மு.க.​முத்து வீட்​டில் வனத்​துறை அதி​காரி​கள் விசா​ரணை நடத்​தினர்.

நடிகர் விக்​ரம் தனது சமூக வலை​தளத்​தில் குரங்கு குட்டி ஒன்​றுடன் கொஞ்சி விளை​யாடும் வீடியோவை பதி​விட்​டிருந்​தார். விக்​ரமின் முடியை பிடித்து குரங்கு சேட்டை செய்​வது, அதனுடன் விக்​ரம் கொஞ்சி மகிழும் காட்​சிகள் இணை​யத்​தில் வைரலானது.

இந்த குரங்கு லார் கிப்​பன் எனப்​படும் இந்​தோ​னேசி​யாவை பூர்​வீக​மாகக் கொண்​டது என கூறப்​படு​கிறது. இந்​திய வனவிலங்கு பாது​காப்பு சட்​டத் திருத்​தத்​தின்​படி, சர்​வ​தேச அளவில் பாது​காக்​கப்​பட்ட வெளி​நாட்டு விலங்​கினங்​களை வணிக ரீதி​யாக வாங்​கு​வதும், விற்​பதும், வீடு​களில் வளர்ப்​பதும் இந்​தி​யா​வில் சட்​ட​விரோதம்.

விக்​ரமின் வீடியோ பெரும் சர்ச்​சையை ஏற்​படுத்​திய நிலை​யில், அந்த வீடியோவை சமூக வலைதள பக்​கத்​தில் இருந்து நீக்​கி​னார். தகவலறிந்த வனத்​துறை அதி​காரி​கள், இந்த குரங்கு நடிகர் விக்​ர​முக்கு எப்​படி கிடைத்​தது என்​பது தொடர்​பாக விசா​ரணையைத் தொடங்​கினர்.

விக்​ரம் தனது மகள் வீட்​டில் அந்த குரங்கை கொஞ்​சி​ய​தாக தகவல் கிடைத்​த​தால், நீலாங்​கரை​யில் விக்​ரமின் மகள் வீட்​டுக்குச் சென்று விசா​ரணை நடத்​தினர். விக்​ரமின் மகள், மறைந்த முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யின், மூத்த மகன் மு.க.​முத்து பேரனின் மனைவி என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

மகளை பார்க்க வந்த நடிகர் விக்​ரம், அங்கு விற்​பனைக்​காக யாரோ கொண்டு வந்​திருந்த, குரங்கை எடுத்து கொஞ்​சி​யதும், அதை வீடியோ​வாக பதி​விட்​டதும் விசா​ரணை​யில் தெரிய​வந்​தது.

இதையடுத்​து, தடை செய்​யப்​பட்ட குரங்கை விற்​பனை செய்​யும் நபர் உரிய ஆவணங்​கள் வைத்​துள்​ளாரா என்​பது குறித்து வனத்​துறை அதி​காரி​கள் தீவிர வி​சா​ரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT