சென்னை: தமிழகத்தில் இன்று முதல் வரும் 11-ம் தேதி வரை நீலகிரி, சேலம், வேலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் மிதமான பனிமூட்டம் காணப்படும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (பிப்.8) முதல் வரும் 13-ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.
அதேபோல, வரும் 11-ம் தேதி வரை நீலகிரி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை. தமிழகத்தில் பிப். 7-ம் தேதி (நேற்று) நிறைவடைந்த 24 மணி நேரத்தில் திருத்தணியில்16 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைபதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.