அதிகாரிகள் ஆலோசனை

 
தமிழகம்

புதுச்சேரியில் ஜன.29 முதல் 31 வரை மலர், காய்கறி, பழக் கண்காட்சி

அ.முன்னடியான்

புதுச்சேரி: புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் சார்பில் 37-வது ஆண்டு மலர், காய்கறி மற்றும் பழக்கண்காட்சி வரும் ஜனவரி 29 முதல் 31-வரை பிரமாண்டமாக நடந்த வேளாண் அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகரன் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் ஆண்டுதோறும் மலர் மற்றும் காய்கனிகள் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 37-வது மலர் மற்றும் காய்கனிகள் கண்காட்சி நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் சட்டப்பேரவையில் உள்ள வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது.

இதில் வேளாண் துறைச் செயலர் ரவிப்பிரகாஷ், புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன், போக்குவரத்து எஸ்பி ரச்சனா சிங், வேளாண் இயக்குநர் ஜெயசங்கர், புதுச்சேரி நகராட்சி ஆணையர், மாவட்ட தீயணைப்பு அலுவலர், தோட்டக்கலைப் பிரிவு அலுவலர்கள் உள்ளிட்ட தொடர்புடைய துறைகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் புதுச்சேரியில் 37-வது ஆண்டு மலர், காய்கறி மற்றும் பழக் கண்காட்சி வரும் ஜனவரி 29 முதல் 31 வரை மூன்று நாட்கள் புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இக்கண்காட்சியில் பல்வேறு வகையான மலர்கள், அலங்காரச் செடிகள், காய்கறிகள், பழங்கள், தோட்டக்கலைப் பொருட்கள் மற்றும் நவீன வேளாண் தொழில்நுட்பங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

இதேபோல் ஏனாமில் ஜனவரி 6 முதல் 9 வரையும், மாஹேவில் ஜனவரி 8 முதல் 11 வரையும், காரைக்காலில் பிப்ரவரி 5 முதல் 7 வரையும் இக்கண்காட்சியை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மலர் கண்காட்சிக்காக புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள அரசுத் தோட்டக்கலைப் பண்ணையில் சுமார் 40,000 அலங்கார மற்றும் மலர்ச் செடிகள் உற்பத்தி செய்து வளர்க்கப்பட்டுள்ளன.

மேலும், கண்காட்சியின் சிறப்பையும் அழகையும் மேம்படுத்தும் வகையில் பெங்களுரு, புனே மற்றும் ஆந்திரப்பிரதேசத்தின் காடியம் ஆகிய இடங்களில் உள்ள புகழ்பெற்ற தோட்டக்கலைப் பண்ணைகள் மற்றும் நர்சரிகளில் இருந்து அரிய வகை, வெளிநாட்டு மற்றும் சிறப்பு அலங்காரச் செடிகளை கொள்முதல் செய்து காட்சிப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT