குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளின்றி வெறிச்சோடி காணப்படும் கொடிவேரி தடுப்பணை அருவி.

 
தமிழகம்

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

செய்திப்பிரிவு

ஈரோடு: பவானி ஆற்​றில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டுள்​ள​தால், கரையோரப் பகுதி மக்​களுக்கு வெள்ள அபாய எச்​சரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ளது.

ஈரோடு மாவட்​டம் பவானிசாகர் அணை​யின் நீர்ப்​பி​டிப்​புப் பகுதி​களான நீல​கிரி மாவட்​டம் மற்​றும் அதன் சுற்​று​வட்​டாரப் பகுதி​களில் கடந்த சில நாட்​களாக கனமழை பெய்து வரு​கிறது. இத​னால், பவானிசாகர் அணை​யின் நீர்​மட்​டம் வேக​மாக உயர்ந்து வரு​கிறது. நேற்று காலை நில​வரப்​படி அணை​யின் நீர்​மட்​டம் 64.55 அடி​யாக இருந்​தது. அணைக்கு விநாடிக்கு 56,672 கன அடி நீர் வந்து கொண்​டிருந்​தது.

பவானி ஆற்​றில் இரு கரைகளை​யும் தொட்​டபடி வெள்​ளநீர் செல்​வ​தால், கரையோரப் பகுதி​களில் வசிக்​கும் மக்​களுக்கு வெள்ள அபாய எச்​சரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ளது.

கொடிவேரி​யில் குளிக்​கத் தடை: கோபிசெட்​டிப்​பாளை​யம் அருகே உள்ள கொடிவேரி தடுப்​பணை அரு​வி​யில் வெள்​ளநீர் அபாயக் கட்​டத்​தைத் தாண்டி பாய்ந்து செல்​கிறது. இதையடுத்து, முன்​னெச்​சரிக்கை நட​வடிக்​கை​யாக நேற்று முதல் சுற்​றுலாப் பயணிகள் தடுப்​பணை​யில் குளிக்க தற்​காலிகத் தடை விதிக்​கப்​பட்​டுள்​ளது.

இது​குறித்த அறி​விப்​புப் பல​கையும் தடுப்​பணை நுழைவுப் பகுதி​யில் வைக்​கப்​பட்​டுள்​ளது. விடு​முறை நாளான நேற்று, கொடிவேரி தடுப்​பணைக்கு குளிப்​ப​தற்​காக வந்த சுற்​றுலாப் பயணிகள், தடை காரண​மாக ஏமாற்​றத்​துடன் திரும்​பிச் சென்​றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT