கோப்புப் படம்

 
தமிழகம்

மோசமான வானிலையால் புதுவையில் விமான சேவை பாதிப்பு

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: மோசமான வானிலையால் புதுச்சேரியில் இன்று விமான சேவை பாதிக்கப்பட்டது.

இது தொடர்பாக விமான நிலைய இயக்குநர் ராஜசேகர ரெட்டி கூறுகையில், “மோசமான வானிலையால் பெங்களூருவில் இருந்து புதுச்சேரி வரும் விமானம் சென்னைக்கு திருப்பி விடப்பட்டது. இதில் 66 பயணிகள் பயணம் செய்தனர். அதேபோல் புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத்துக்கு 64 பயணிகள் பயணம் செய்ய இருந்தனர். அந்த விமானம் மோசமான வானிலையால் ரத்தானது” என்றார்.

SCROLL FOR NEXT