குற்றாலம் பிரதான அருவியில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்.

 
தமிழகம்

பலத்த மழையால் குற்றாலம், மணிமுத்தாறு, திற்பரப்பு அருவிகளில் நீடிக்கும் வெள்ளப்பெருக்கு

செய்திப்பிரிவு

தென்காசி: மேற்கு தொடர்ச்சி மலைப்​பகு​தி​யில் பெய்​யும் பலத்த மழை காரண​மாக குற்​றாலம், மணி​முத்​தாறு, திற்​பரப்பு அருவி​களில் தொடர்ந்து வெள்​ளப்​பெருக்கு நீடிக்​கிறது.

தென்​காசி, நெல்லை, கன்​னி​யாகுமரி ஆகிய மேற்கு தொடர்ச்சி மலை​யோர மாவட்​டங்​களில், கடந்த ஒரு வார​மாக தென்​மேற்கு பரு​வ​மழை தீவிரம் அடைந்​துள்​ளது. குளிர்ந்த காற்​றுடன் அடிக்​கடி சாரல் மழை பெய்து வரு​கிறது. நேற்று அதி​கபட்​ச​மாக திருநெல்​வேலி மாவட்​டம் மாஞ்​சோலை​யில் 10 செ.மீ., ஊத்து பகு​தி​யில் 9 செ.மீ. மழை பதி​வாகி​யிருந்​தது.

இதன் காரண​மாக, குற்​றாலத்​தில் அனைத்து அருவி​களி​லும் தண்​ணீர் ஆர்ப்​பரித்​துக் கொட்​டியது. நேற்று காலை ஏற்​பட்ட வெள்​ளப்​பெருக்கு காரண​மாக அனைத்து அருவி​களி​லும் குளிக்க இரண்​டாவது நாளாக தடை நீடித்​தது. காலை 10 மணிக்கு பின்​னர், நீர்வரத்து சீரடைந்​த​தால் ஐந்​தருவி மற்​றும் புலியரு​வி​யில் குளிக்க அனு​மதி அளிக்​கப்​பட்​டது. சாரல் சீஸன் களை​கட்​டி​யுள்​ள​தால் தமிழகம் மற்​றும் கேரளத்​தில் இருந்து சுற்​றுலா பயணி​கள் குற்​றாலத்​தில் குவி​கின்​றனர்.

இது​போல், மணி​முத்​தாறு அரு​வி​யில் தொடர்ந்து நில​வும் வெள்​ளப்​பெருக்கு காரண​மாக, 9-வது நாளாக நேற்றும் சுற்​றுலா பயணி​கள் குளிக்க வனத்​துறை தடை விதித்​திருந்​தது. கன்​னி​யாகுமரி மாவட்​டம் கோதை​யாற்​றில் ஏற்​பட்​டுள்ள வெள்​ளப்​பெருக்கால், திற்​பரப்பு அரு​வி​யில் அபாய அளவைத் தாண்டி தண்​ணீர் கொட்​டு​கிறது. இதனால், இங்கும் குளிக்க தடை வி​திக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT