தமிழகம்

உற்பத்தி குறைவால் பட்டாசு விலை 15% வரை உயர்வு: தீபாவளிக்குத் தற்காலிக அனுமதி வழங்கும் பணி தொடக்கம்

கோபாலகிருஷ்ணன்

சிவகாசி: தீ​பாவளி பண்​டிகைக்​காகத் தற்​காலிக பட்​டாசு கடைகளுக்கு அனு​மதி வழங்​கும் பணி​கள் தொடங்​கி​ உள்ளன. அதே வேளையில் உற்​பத்தி குறைவு காரண​மாகப் பட்​டாசு ஆலைகளில் அடக்க விலை 15 சதவீதம் வரை அதி​கரித்​துள்​ளது.

சிவ​காசி பகு​தி​யில் 1,100-க்​கும் மேற்​பட்ட அனுமதி பெற்ற பட்​டாசு ஆலைகள் இயங்​கி வருகின்றன. பேரி​யம் நைட்​ரேட் பயன்​படுத்​தத் தடை, இணைப்பு வெடிகள் உற்​பத்தி செய்​யத் தடை உள்​ளிட்ட கட்​டுப்​பாடு​களால் 60 சதவீத வகை பட்​டாசுகள் மட்​டுமே உற்​பத்தி செய்​யப்​படு​கின்​றன.

கடந்த 2 ஆண்​டு​களாகப் பட்​டாசு உற்​பத்தி குறைந்​த ​போதும், விலை அதி​கரிப்பால் ரூ.6,000 கோடி அளவுக்கு தீபாவளி விற்​பனை நடந்தது. தமிழகத்​தில் விருதுநகர் மாவட்​டத்​தில் மட்​டும் ஆண்டு முழு​வதும் செயல்​படும் நிரந்தர பட்​டாசு கடைகளுக்​கான உரிமம் வழங்​கப்​படு​கிறது. விருதுநகர் மாவட்​டத்​தில் உள்ள 2,500-க்கும் அதி​க​மான சில்​லறை விற்​பனை கடைகளில் ஆடிப் பெருக்கு அன்று பட்​டாசு விற்​பனை தொடங்​கியது. தற்​போது தமிழகம் முழு​வதும் தீபாவளி விற்​பனைக்​கான தற்​காலிகப் பட்​டாசு கடைகளுக்கு அனு​மதி வழங்​கும் பணி தொடங்​கி​யுள்​ளது.

இதனால் வெளி​மாவட்ட வியா​பாரி​கள் மற்​றும் பெரு நிறு​வனங்​கள் தொழிலா​ளர்​களுக்கு வழங்​க​வும், தொழில் ​துறை​யினர் வாடிக்​கை​யாளர்​களுக்கு வழங்​க​வும் அன்பளிப்பு பெட்டி (கிஃப்ட் பாக்ஸ்) ரக பட்​டாசுகளை ஆர்​டர் கொடுக்க சிவ​காசி​யில் குவிந்து வரு​கின்​றனர். இதற்கிடையில், கட்​டுப்​பாடுகள், மூலப்பொருட்களின் விலையேற்றம் போன்றவற்றால் ஆலைகளில் பட்​டாசுக்​கான அடக்க விலை 15 சதவீதம் வரை உயர்ந்​துள்​ளது. இதனால் சில்​லறை கடைகளில் பட்​டாசு விலை 20 முதல் 25 சதவீதம் உயர வாய்ப்​புள்​ள​தாக விற்​பனை​யாளர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

இதுகுறித்து பட்​டாசு உற்​பத்​தி​யாளர்​கள் மற்​றும் விற்​பனை​யாளர்​கள் கூறுகையில், ‘‘மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்​களில் பெரும்​பாலான பட்​டாசு ஆலைகளில் உற்​பத்தி நடை​பெற​வில்​லை. இதனால் ஏற்​கெனவே ஆர்​டர் செய்த பட்​டாசுகளைக் கடைகளுக்கு வழங்​கு​வ​தில் சிக்​கல் ஏற்​பட்​டுள்​ளது. அடக்க விலை உயர்ந்த நிலை​யில், லாரி வாடகை உயர்வு உள்​ளிட்ட காரணங்​களால் சில்​லறை விற்​பனை 25 சதவீதம் வரை உயர்ந்​துள்​ளது. விலை உயர்ந்த போதும், தீபாவளி நெருங்​கும் நேரத்​தில் மக்​கள் விரும்​பும் பேன்சி ரகப் பட்​டாசுகளுக்​குத் தட்​டுப்​பாடு ஏற்​பட வாய்​ப்​பு உள்​ளது’’ என்​றனர்.

SCROLL FOR NEXT