தமிழகம்

“கடைக்கோடி மக்களுக்கும் வங்கி கடன்கள் உள்ளிட்ட சேவைகள்” - உதயச்சந்திரன் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுவின் 185-வது கூட்டம் தமிழக அரசின் நிதித்துறை செயலர் டி.உதயச்சந்திரன் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் செயல் இயக்குநரும், மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுவின் தலைவருமான டி.தனராஜ், ரிசர்வ் வங்கியின் மண்டல இயக்குநர் உமா சங்கர், நபார்டு வங்கியின் பொதுமேலாளர் எஸ்.எஸ். வசீகரன் மற்றும் தமிழக அரசின் பல்வேறு துறைகளின் செயலர்கள், உயர் அதிகாரிகள், வங்கிகளின் முதுநிலை பிரதிநிதிகள், மாவட்ட முதன்மை மேலாளர்கள் பங்கேற்றனர்.

          

இந்நிகழ்வில் தமிழக நிதித் துறைச் செயலர் டி.உதயச்சந்திரன் பேசும்போது, "தமிழ்கத்தில் வலுவான பொருளாதார வளர்ச்சியை அடுத்த 10 ஆண்டுகளுக்கு தொடர்ந்து தக்கவைப்பது அவசியமான ஒன்று. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, விவசாயம் மற்றும் பெண் தொழில் முனைவோருக்கும், பட்டியல் மற்றும் பழங்குடியினருக்கும் அதிகளவில் கடன் வழங்கினால் மட்டுமே அடித்தட்டு பொருளாதாரம் மேம்படும். கடைக்கோடி மக்களுக்கும் வங்கி கடன்கள் உள்ளிட்ட சேவைகள் தடையின்றி கிடைப்பதை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும்" என்றார்.

இந்தக் கூட்டத்தில் 2025- 26 நிதியாண்டுக்கான ரூ.9 லட்சம் கோடி என்ற இலக்கில் தமிழக வங்கிகள் இதுவரை ரூ.7.56 லட் சம் கோடி எட்டியுள்ளதாகவும். இதன்மூலம் வருடாந்திர் இலக்கு 83.97 சதவீதமாக உயர்ந்துள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களும் நிர்ணயிக்கப் பட்ட இலக்கை எட்டியிருப்பதுடன், இலக்கை விட முன்னேற்றம் கண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மாநில அளவிலான வங்கியாளர்கள் குழுவின் ஒருங்கி ணைப்பாளரும், இந்தியன் ஓவர் சீஸ் வங்கியின் பொது மேலாளருமான விஜயா, இக்கூட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கினார். இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செய்திருந்தது.

SCROLL FOR NEXT