தமிழகம்

தமிழக பேரவைத் தேர்தல் 2026-க்கான வேட்புமனு தாக்கல் நிறைவு

வெற்றி மயிலோன்

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று (ஏப்.6) பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது.

234 தொகுதிகளுக்கான தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக மார்ச் 30 ஆம் தேதி தொடங்கிய வேட்புமனுத் தாக்கல், இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்தது. நாளை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறவுள்ள நிலையில், இறுதி வேட்பாளர் பட்டியல் ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகிறது.

          

வேட்புமனுத் தாக்கலுக்கான கடைசி நாளான இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜகவின் வானதி சீனிவாசன் ஆகியோர் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். தனது மகனுக்கு மாற்றாக திமுக அமைச்சர் காந்தியும் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், சுமார் 4300-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதில் அதிகபட்சமாக கரூரில் 93-க்கும் மேற்பட்டோர் வேட்புமனு அளித்துள்ளனர்.

தமிழகத்தில் நான்குமுனைப் போட்டி நிலவுகிறது. திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. நாம் தமிழர் கட்சி மற்றும் தவெக கட்சிகள் தனித்தனியாக 234 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.

SCROLL FOR NEXT