தமிழகம்

பண்டிகை காலத்தை முன்னிட்டு ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக சிறப்பு ரயில்

செய்திப்பிரிவு

சென்னை: பண்டிகை காலத்தை முன்னிட்டு, சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் வசதிக்காக, ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

அதன் விவரம்: திருவனந்தபுரம் வடக்கில் இருந்து அக்.2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் (வெள்ளிக் கிழமைகளில்) மதியம் 2.15 மணிக்கு சிறப்பு ரயில் (06081) புறப்பட்டு, ஞாயிற்றுக்கிழமை மதியம் 1.45 மணிக்கு மேற்கு வங்கம் சந்திரகாச்சியை அடையும்.

மறுமார்க்கமாக, சந்திரகாச்சியில் இருந்து அக்.5, 12, 19, 26, நவ.2 ஆகிய தேதிகளில் (திங்கள் கிழமைகளில்) மதியம் 2.15 மணிக்கு சிறப்பு ரயில் (06082) புறப்பட்டு, புதன் கிழமைகளில் காலை 9.55 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தை சென்றடையும். இந்த ரயில் கொல்லம், போத்தனூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, திருத்தணி வழியாக சந்திரகாச்சியை அடையும்.

போத்தனூர் - பரௌனி- போத்தனூரில் இருந்து அக்.4, 11, 18, 25, நவ.1 ஆகிய தேதிகளில் (ஞாயிற்றுக் கிழமைகளில் ) காலை 6.15 மணிக்கு சிறப்பு ரயில் (06021) புறப்பட்டு, பிஹார் மாநிலம் பரௌனியை செவ்வாய்க் கிழமை மதியம் 1.30 மணிக்கு சென்றடையும்.

மறுமார்க்கமாக, பரௌனியில் இருந்து அக்.7, 14, 21, 28, நவ.4 ஆகிய தேதிகளில் (புதன்கிழமைகளில்) சிறப்பு ரயில் (06022) புறப்பட்டு, வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு போத்தனூரை அடையும். இந்த ரயில் ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக இயக்கப்படும்.

இதுதவிர, திருவனந்தபுரம் சென்ட்ரல்- ராஜஸ்தான் மடார் சந்திப்பு இடையே ஒரு சிறப்பு ரயிலும், எர்ணாகுளம் பாட்னா இடையே ஒரு சிறப்பு ரயிலும் இயக்கப்படவுள்ளது. இந்த சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (செப்.20) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இத்தகவல் தெற்கு ரயில்வே செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT