தமிழகம்

சென்னை: வீட்டைவிட்டு வந்த மாணவிகள் மீட்பு

செய்திப்பிரிவு

சென்னை: கீழ்ப்​பாக்​கம் முருகன் மருத்​து​வ​மனை அருகே நேற்று முன்​தினம் இரவு 2 சிறுமிகள் சுற்​றித் திரிந்தனர்.

அப்​போது, ரோந்​துப் பணி​யில் ஈடு​பட்​டிருந்த கீழ்ப்​பாக்​கம் காவல் நிலைய காவலர் வசந்த், அவர்​களிடம் விசா​ரித்​தார். இரு​வரும் வேலூர் மாவட்​டத்​தில் இருந்து தனியாக ரயில் மூலம் சென்னை வந்​தது தெரிய​வந்​தது. இரு​வரை​யும் காவல் நிலை​யத்​துக்கு அழைத்​துச் சென்று, பெண் காவலர்​கள் உதவியுடன் விசா​ரணை நடத்​தப்​பட்​டது. அவர்​கள் வேலூர் மாவட்​டம் பேரணாம்​பட்டு அடுத்த பதிலப்​பள்ளி பகுதி​யைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவி​கள்.

தாய் திட்​டிய​தால் வருத்​தமடைந்த மாணவி, தனது தோழியுடன் வீட்​டை​விட்டு வெளியேறி சென்னை வந்​தது தெரிந்தது. இதற்கிடையே பெற்​றோர் அளித்த புகாரின்​பேரில், சிறுமிகளை வேலூர் போலீ​ஸார் தேடி வந்​தனர். சென்​னை​யில் சிறுமிகள் இருப்​பதை அறிந்து இங்கு வந்த அவர்​கள், சிறுமிகளை அழைத்​துச் சென்று பெற்​றோரிடம் ஒப்​படைத்​தனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT