சென்னை: தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு தரவேண்டிய ரூ.317 கோடி நிலுவையை மத்திய அரசிடம் இருந்து பெற்றுத்தர விவசாயிகள், முதல்வர் விஜய்யிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: முதல்வர் விஜய்யை தலைமைச் செயலகத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பி. அய்யாக்கண்ணு மற்றும் சங்க நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது, தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு தொடர்பாக ரூ.317 கோடி நிலுவைத் தொகை இருப்பதாகவும், அதனை மத்திய அரசிடம் பேசி பெற்றுத் தர நடவடிக்கை எடுக்குமாறும் கோரி, முதல்வரிடம் மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து, முதல்வர் நிலுவைத் தொகையை இரண்டு வாரங்களுக்குள் பெற்றுத் தர தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
இந்த சந்திப்பின்போது தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் உடனிருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.