தமிழகம்

மேட்டூர் அணை திறக்க விவசாயிகள் எதிர்ப்பு: நீர்மட்டம் 100 அடியை எட்டும் வரை காத்திருக்க வலியுறுத்தல்

45 நாட்களுக்கு தண்ணீர் திறப்பது பாதிப்பை ஏற்படுத்தும்

செய்திப்பிரிவு

திருவாரூர்/தஞ்சாவூர்: மேட்​டூர் அணை​யில் இருந்து 45 நாட்​களுக்கு தண்​ணீர் திறக்​கப்​படும் என்​கிற அறி​விப்​பால் பின்​னாளில் தண்​ணீர் பற்​றாக்​குறை ஏற்​பட்டு பாதிப்பை ஏற்​படுத்​தும் என்​ப​தால், அணை​யின் நீர்​மட்​டம் 100 அடியை எட்​டிய பிறகே திறக்க வேண்​டும் என விவ​சாய சங்​கங்​கள் வலி​யுறுத்​தி​யுள்​ளன.

இதுதொடர்​பாக தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்​கத்​தின் பொதுச்​செய​லா​ளர் பி.எஸ்​.​மாசிலாமணி, சாமி.நட​ராஜன் ஆகியோர் தனித்​தனி​யாக வெளி​யிட்ட அறிக்​கை: டெல்டா பாசனத்​துக்​காக செப்​.1-ம் தேதி முதல் 45 நாட்​களுக்கு மேட்​டூர் அணை திறக்​கப்​படும் என அரசு அறி​வித்​துள்​ளது விவ​சா​யிகள் மத்​தி​யில் குழப்​பத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது. ஏனென்​றால் மேட்​டூர் அணை​யில் தற்​போதைய நீர்​மட்​டம் 90 அடி​யாகத் தான் உள்​ளது. இதனால், அணை​யில் இருந்து 40 முதல் 50 நாட்​கள் வரை மட்​டுமே தண்​ணீர் திறக்க முடி​யும். இது சம்பா சாகுபடிக்கு போது​மான​தாக இருக்​காது.

எனவே, அணைக்கு நீர்​வரத்​தும் 8 ஆயிரம் முதல் 12 ஆயிரம் கனஅடி வரை இருக்​கும் நிலை​யில், அணை​யின் நீர்​மட்​டம் 100 அடியை எட்​டிய பிறகோ அல்​லது செப்​.10-ம் தேதிக்கு பிறகோ பாசனத்​துக்​காக தண்​ணீர் திறந்​தால்தான் ஒரு போக சம்பா சாகுபடியை விவ​சா​யிகள் முழு​மை​யாக செய்ய முடி​யும். இவ்​வாறு தெரி​வித்​துள்​ளனர்.

இதே​போல், தமிழ்​நாடு அனைத்து விவ​சா​யிகள் சங்​கங்​களின் ஒருங்​கிணைப்​புக் குழு தலை​வர் பி.ஆர்​.​பாண்​டியன் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “மேட்டூர் அணை திறப்புக்கு முன்னதாக வேளாண்மை துறை, நீர்பாசனத் துறை அதிகாரிகள், விவசாயிகள் கொண்ட முத்தரப்பு கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமல், செப்.1-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என நீர்ப்பாசனத் துறை அறிவித்திருப்பது விவசாயிகளை அவமதிக்கும் நடவடிக்கையாகும்.

மேட்டூர் அணையில் 100 அடி தண்ணீர் இருந்தால் மட்டுமே, பாசனத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும். இல்லை என்றால் பிற்பகுதியில் கதிர் வரும் நிலையில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு, மிகப்பெரிய பேரழிவை சந்திக்க வேண்டிவரும். மேலும், மேட்டூர் அணையிலிருந்து 45 நாட்களுக்கு, அதாவது அக்டோபர் 15 வரை தண்ணீர் திறக்கப்படும் என அரசாணை வெளியிட்டது சட்டத்துக்கு புறம்பானதாகும். இதுபோன்ற அறிவிப்பு, எதிர்காலத்தில் நமக்கான உரிமைகளை பெறுவதில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.

இருக்கும் தண்ணீரை எப்படி பயன்படுத்தி எந்த வகையான பயிர்களை பயிரிடுவது என்பது குறித்து விவசாயிகளுடன் கலந்துரையாட வேண்டும். நேரடி விதைப்பா அல்லது நடவா என்பது குறித்த தொழில்நுட்ப ஆலோசனையை வேளாண்மை துறை வழங்க வேண்டும். அதற்கான எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாமல் தண்ணீர் திறப்பது பயனற்றதாகிவிடும்.

அமைச்சர்களுக்கு அனுபவம் இல்லாவிட்டாலும் அதிகாரிகளாவது ஆலோசனைகளை வழங்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். முதல்வர் விஜய் செப்.1-ம் தேதி அணையை திறக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT