விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி
சென்னை: அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் யாராக இருந்தாலும் கள் தடை நியாயமானது என நிரூபித்தால் இனோவா காரை பரிசு தருவதாக விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடகாவில் குறுவை சாகுபடி சாத்தியமாகும்போது ஏன் தமிழகத்தில் சாத்தியமாகவில்லை. இது குறித்து எந்த இடது சாரியோ, வலது சாரியோ அல்லது தேசிய கட்சிகளோ வாய்த்திறக்கவில்லை.
தற்போது தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இதுவரை யாரும் காவிரி நீர் பிரச்சினை குறித்து குரல் எழுப்பவில்லை. அதற்கு மாறாக பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. காவிரி பிரச்சினையில் தமிழகம், கர்நாடகா மாநில அரசுகளும் தவறு செய்து வருகின்றன. காவிரித் தீர்ப்பை கர்நாடகா அரசு காலில் போட்டு மிதித்து உள்ளது.
தமிழகத்தில்கள் இறக்குவதற்கான தடையை நீக்கக் கோரி ஏராளமான போராட்டங்கள் நடத்தியும் அரசு செவிசாய்க்கவில்லை. கள் தடை நியாயமானது என அமைச்சர்களோ, எம்எல்ஏக்களோ யார் நிருபித்தாலும் அவர்களுக்கு இனோவா காரை பரிசாக கொடுக்க தயாராக உள்ளோம். வரக்கூடிய இடைத்தேர்தலில் பெருந்துறை தொகுதியில் காவிரி உரிமை மீட்பு. கள் விடுதலை அமைப்பு சார்பில் ஒருவரை வேட்பாளராக களமிறக்க உள்ளோம்.
தமிழக அரசு மதுக் கொள்கையை மாற்றியமைக்க வேண் டும். இலவச மானியம்,கடன் தள்ளுபடி, காப்பீடு நிவாரணம், வருமான வரி விலக்கு போன்ற சலுகைகளை நாங்கள் கேட்க வில்லை. எங்களுக்கு தேவை சுயமரியாதை. அமைச்சரை சந் தித்து கோரிக்கை வைத்துள் ளோம். நல்ல முடிவு வரும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி பேசினார்.