ஈரோடு மாவட்டம் காஞ்சிக்கோவிலில் தனது வீட்டில் கிடைத்த பழங்கால ஓலைச்சுவடிகளை சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழும அதிகாரிகளிடம் ஒப்படைத்த விவசாயி ஜெகநாதன்.

 
தமிழகம்

சித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்திடம் அரிய ஓலைச்சுவடிகளை ஒப்படைத்த விவசாயி

செய்திப்பிரிவு

ஈரோடு: ஈரோடு பெருந்​துறையை அடுத்​துள்ள காஞ்​சிக்​கோ​விலைச் சேர்ந்த விவ​சாயி ஜெக​நாதன். தனது வீட்​டில் மூதாதையர்​ பாது​காத்த அரிய மருத்​து​வக் குறிப்​பு​கள் அடங்​கிய ஓலைச்​சுவடிகளை சித்த மருத்​துவ ஆராய்ச்சிக் குழு​மத்​திடம் ஒப்​படைத்​தார். அவரது செயலை பலரும் பாராட்டி வரு​கின்​றனர்.

ஜெக​நாதனின் வீட்​டில் இருந்த ஓலைச்​சுவடிகளை அவர் ஆய்வு செய்​த​போது, அதில் முக்​கிய​மான மருத்​து​வக் குறிப்​பு​கள் இருப்​பதை அறிந்​தார். இதையடுத்​து, சென்​னை​யில் உள்ள சித்த மருத்​துவ ஆராய்ச்சிக்குழும நிர்​வாகி​களுக்கு ஓலைச்​சுவடி பற்றி தெரி​வித்​தார்.

தொடர்ந்​து, சித்த மருத்​துவ ஆராய்ச்சி குழும அதி​காரி மாணிக்​க​வாசகம் தலை​மையி​லான மருத்​து​வர்​கள் ஜெக​நாதனின் வீட்​டுக்​குச் சென்று ஓலைச்​சுவடிகளை பார்​வை​யிட்​டனர். பின்​னர், அவற்றை ஜெக​நாதன் ஆராய்ச்சி குழு​மத்​திடம் ஒப்​படைத்​தார்.

இதுகுறித்து அதி​காரி மாணிக்​க​வாசகம் கூறுகை​யில், “தமிழ் மருத்​து​வத்​தின் பாரம்​பரிய​மான சித்த மருத்​து​வக் குறிப்​பு​கள் அதி​கள​வில் ஓலைச்​சுவடிகளில்​தான் இடம்​பெற்​றுள்​ளன. இவற்றை முறை​யாகப் பராமரிப்​பதுடன், முக்​கிய மருத்​து​வக் குறிப்​பு​களை பொது​மக்​களின் பயன்​பாட்​டுக்கு கொண்டு வரவும் நடவடிக்கை மேற்​கொண்டு வரு​கிறோம். இது​போன்ற ஓலைச்​சுவடிகள் இருந்​தால், சித்த மருத்​துவ ஆராய்ச்சி குழு​மத்தை அணுகலாம்” என்​றார்.

SCROLL FOR NEXT