தமிழகம்

தாம்பரம் - போடிநாயக்கனூர் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

செய்திப்பிரிவு

சென்னை: பயணி​கள் வசதிக்​காக, தாம்பரம் - போடி​நாயக்​க​னூர் சிறப்பு ரயி​லின் சேவை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. தெற்கு ரயில்​வே​யில் முக்​கிய வழித்​தடங்​களில் இயக்​கப்​படும் வழக்​க​மான ரயில்​களுக்கு பயணி​களின் அதிக தேவை அடிப்​படை​யில், சிறப்பு ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன.

இந்த ரயில்​களுக்கு வரவேற்பு அதி​கரிக்​கும் பட்​சத்​தில், சேவை​கள் நீட்​டிக்​கப்​படு​கின்​றன. அந்த வகை​யில், தாம்​பரம் - போடி​நாயக்​க​னூர் சிறப்பு ரயில் சேவை நீட்​டிக்​கப்பட உள்​ளது.

இதன்​படி, தாம்​பரம் - போடி​நாயக்​க​னூருக்கு சனிக்​கிழமை​களில் இரவு 10.30 மணிக்கு சிறப்பு ரயில் (06059) புறப்பட்​டு, மறு​நாள் காலை சென்​றடைகிறது. இந்த ரயி​லின் இரண்டு சேவை​கள் (ஜூன் 20, 27) நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளன.

மறு​மார்க்​க​மாக, போடி​நாயக்​க​னூர் - தாம்​பரத்​துக்கு ஞாயிற்​றுக்​கிழமை மாலை 4.45 மணிக்கு இயக்​கப்​படும் சிறப்பு ரயில் (06060) சேவை வரும் ஜூன் 21, 28 ஆகிய தேதி​களில் சேவை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. இத்​தகவல் தெற்கு ரயில்வே செய்​திக் குறிப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT