தமிழகம்

சென்னை | ரயில்வே பராமரிப்பு பணி - 16 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம்

செய்திப்பிரிவு

சென்னை ரயில்வே கோட்டத்தில் பல இடங்களில் டிசம்பர் மாதத்தில் ரயில்வே பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால், வைகை உள்பட 16 விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளன.

அதன்விவரம்: போத்தனூர்- சென்னை சென்ட்ரலுக்கு டிச.8-ம் தேதி மாலை 6.30 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் (06124) வழியில் 15 நிமிடம் நின்று செல்லும். இதே ரயில் டிச.15, 22 29 ஆகிய தேதிகளில் வழியில் 5 நிமிடம் நின்று செல்லும். சென்னை எழும்பூர் - மதுரைக்கு டிச.4, 13, 16, 18, 20, 23 ஆகிய தேதிகளில் மதியம் 1.45 மணிக்கு புறப்படும் வைகை விரைவு ரயில் (12635) வழியில் 10 நிமிடங்கள் நின்று செல்லும்.

புதுச்சேரியில் இருந்து காச்சிகூடாவுக்கு டிச.6, 26, 30 ஆகிய தேதிகளில் புறப்படும் விரைவு ரயில் (17654), வரும் வழியில் ஒரு மணி நேரம் நின்று செல்லும். புதுச்சேரி - காக்கிநாடாவுக்கு டிச.6, 22, 27 ஆகிய தேதிகளில் புறப்படும் சர்க்கார் விரைவு ரயில் (17656) வழியில் ஒரு மணி நேரம் நின்று செல்லும்.

சென்னை சென்ட்ரல் - கொல்லத்துக்கு டிச.6-ம் தேதி இரவு 11.50 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் (06117) செல்லும் வழியில் ஒன்றரை மணி நேரம் நின்று செல்லும். சென்னை சென்ட்ரல் - ஈரோடுக்கு டிச.21, 28 ஆகிய தேதிகளில் இரவு 11 மணிக்கு புறப்படும் ஏற்காடு விரைவு ரயில் (22649) வழியில் 50 நிமிடங்கள் நின்று செல்லும்.

இதேபோல் சென்னை சென்ட்ரல் - மங்களூருக்கு டிச.24, 31 ஆகிய தேதிகளில் இரவு 8.10 மணிக்கு புறப்படும் விரைவு ரயில் (12601) வழியில் 5 நிமிடம் நின்று செல்லும். மொத்தம் 16 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளன. இத்தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT