தமிழகம்

“ஆர்டிஐயிலிருந்து சட்டம் - ஒழுங்கு விலக்கு; தமிழகத்தை போலீஸ் ஸ்டேட்டாக மாற்றும் முயற்சி” - சு.வெங்கடேசன் கண்டனம்

வெற்றி மயிலோன்

சென்னை: “தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து சட்டம்- ஒழுங்கு விவகாரங்களுக்கு விலக்களிப்பது தமிழகத்தை போலீஸ் ஸ்டேட்டாக மாற்றும் முயற்சி” என சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து பொதுத்துறையின் சட்டம் ஒழுங்கு விவகாரங்களுக்கு மட்டும் விலக்களிக்கப்பட்டுள்ளது. இடதுசாரி அமைப்புகளைக் கண்காணிக்க அரசு அதிகாரிகள் உத்தரவிடுகிறார்கள். காவல் மரணங்கள் நடக்கின்றன.

மாணவர் போராட்டங்களை ஒடுக்க கல்வித்துறைக்கு உத்தரவிடப்படுகிறது. கல்லூரி வளாகங்களுக்குள் புகுந்து மாணவர்களைக் கைது செய்கிறது காவல்துறை. நியாயமான உரிமைக்கான போராட்டங்கள் வன்முறை கொண்டு ஒடுக்கப்படுகிறது. 

இந்நிலையில் சட்டம் - ஒழுங்கு விவகாரங்களுக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலக்களிப்பது கடும் கண்டனத்துக்குரியது.

இது தமிழ்நாட்டை ‘போலீஸ் ஸ்டேட்டாக’ மாற்றத்துணியும் வெளிப்படையான முயற்சி.  எனவே, இந்த உத்தரவை உடனடியாக அரசு திரும்பப்பெற வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT