சென்னை: ‘வீ த லீடர்ஸ்’-ன் பிரத்யேக செயலியை அறிமுகம் செய்துள்ள அண்ணாமலை, மாற்றத்தை உருவாக்கும் பயணத்தில் இணைய பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்த விளக்க வீடியோ ஒன்றையும் தனது ‘எக்ஸ்' தளபக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘செயலியை பதிவிறக்கம் செய்து, உங்கள் பகுதியில் மாற்றத்தை உருவாக்கும் பயணத்தில் நீங்களும் இணைந்திடுங்கள். சமூக மாற்றத்துக்கான தலைமைப் பயணத்தைத் தொடங்குங்கள்’ என பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து அந்த வீடியோவில் கூறப்பட்டிருப்பதாவது: முதலில் கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரில் ‘We The Leader’ என டைப்செய்து செயலியைப் பதிவிறக்கம் செய்யவும். ஏற்கெனவே இணைந்தவர்கள் ‘Sign-in’ பட்டனைப் பயன்படுத்தலாம்.
புதிதாக இணைபவர்கள் ‘Join’ பட்டனை அழுத்த வேண்டும். புதிதாக இணைபவர்கள் தங்கள் பெயர், பிறந்த தேதி, மாநிலம் மற்றும் சட்டப்பேரவைத் தொகுதி போன்ற விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும்.
உறுப்பினராக இணைந்ததும் 4 முக்கியமான கேள்விகள் கேட்கப்படும். இதற்கு ‘ஆம்' அல்லது ‘இல்லை' எனப் பதிலளிக்கலாம். பதில் சொல்ல விருப்பம் இல்லையெனில் அதை நிராகரிக்கலாம். இறுதியில் அண்ணாமலையின் வரவேற்பு வீடியோ தோன்றும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.