கரூர்: “ஓராண்டிற்குப் பின்னும் எமது மண்ணில் எமது மக்களின் உயிர் பறிப்பிற்கு நியாயம் கிடைக்கவில்லை,” என கரூர் எம்.பி. செ.ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
கரூர் எம்.பி. செ.ஜோதிமணி இன்று தனது வாட்ஸ்அப் பதிவில், “எனது தாயின் மரணத்திற்குப் பிறகு நான் முற்றிலும் நொறுங்கிப் போன அந்தக் கொடும் நிகழ்வை ஓராண்டு கடந்தாலும் மறக்கவே முடியவில்லை.
எமது மண்ணில் எமது மக்கள் பிஞ்சுக் குழந்தைகள் உட்பட 41 பேரின் உயிர் பயங்கரமான சூழலில் பறிக்கப்பட்ட அந்த கொடுந்துயர் சூழ்ந்த தினத்தை அவ்வளவு எளிதாக கடந்து போய் விடவே முடியாத ரணம் இன்னும் வலித்துக் கிடக்கிறது.
தமது பிஞ்சுக் குழந்தையை, தாயை, மகளை, மகனை, தகப்பனை, அக்கா, தங்கையை, அண்ணன், தம்பியை, பறி கொடுத்து விட்டு, என்னைக் கண்டதும் கட்டிப் பிடித்துக் கதறிய எமது மக்களுக்கு ஆறுதல் சொல்லத் தெம்பில்லாமல் உடைந்து நொறுங்கிப் போன அந்தத் தரு ணங்களை இப்பொழுது நினைத்தாலும் நெஞ்சு நடுங்குகிறது.
கரூர் அரசு மருத்துவமனைச் சவக்கிடங்கில் மயிலிறகு உறங்குவது போல கண் மூடிக் கிடந்த பிள்ளையும், அலங்கோலமாக மிதி பட்டுக் கிடந்து சகோதரியும், தனது மகளை எங்கெங்கோ தேடியும் கிடைக்காமல், அங்கே காண நேர்ந்த தந்தையின் கேவலும், மருத்துவமனைப் ப டுக்கையில் நடுநடுங்கிய உடலோடும், பயத்தில் உறைந்த நினைவுகளே £டும் என்னை கட்டியணைத்து அழுத எமது மக்களின் அச்சமும், து யரமும் என்றென்றும் மனதின் ஆழ் அடுக்குகளில் இருந்த அகற்றவே முடியாத துயரத்தின் வடுக்களாகிவிட்டன.
தான் நேசித்தவர்களை கொடும் பயங்கரத்தில் இழந்து கண்ணீரும், துயரமும், வேதனையும் உருக்க கதறி அழுதவர்களையும், எப்படியோ அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்து காயத்திலும், பயத்திலும், பயங்கரமான நினைவுகளிலும் உழன்ற எமது மக்களை கட்டியணைத்துக் கொள்வதைத் தவிர ஆறுதல் சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகள் எ துவுமிருக்கவில்லை. பல நேரங்களில் அவர்கள் முன்பு அழக்கூடாது எ ன்கிற எனது வைராக்கியத்திற்கு வலுவிருக்கவில்லை.
அடுத்து வந்த ஒரு மாதமும் உறக்கமற்ற இரவுகளால் அலைக்கழிந் தது. ஒவ்வொரு நாள் காலையும் கனத்த இதயத்தோடும், கலங்கிய மனதோடுமே விடிந்தது. ஒவ்வொரு வீட்டு வாசலிலும் செருப்பைக கழற்றும் போதே மனம் கலங்கியது.
உள்ளே தாங்க முடியாத துயரத்தோடும், வலியோடும், அச்சத்தோடும் உடைந்து நொறுங்கிக் கிடக்கும் எமது மக்களை எதிர்க்கொள்ள முடியாத பதற்றம் தொற்றிக் கொள்ளும். சமாளித்துக் கொண்டுதான் வீட்டிற்கு ள்ளேயே கால் வைக்க முடியும். வீட்டை விட்டு வெளியேறும் போது இதயம் நொறுங்கிக் கிடக்கும்.
அடுத்த வீடு அதே துயரம் கண்ணீர் வேதனை. இப்பொழுது நினைத்துப் பார்த்தால் கூட அந்த கொடும் நாட்களின் பயங்கரம் நெஞ் சில் உறைகிறது. 20 நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்ற பின்பே படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்ப முடிந்தது.
ஆனால் ஓராண்டிற்குப் பின்னும் எமது மண்ணில் எமது மக்களின் உயிர் பறிப்பிற்கு நியாயம் கிடைக்கவில்லை. விசாரணை கிடப்பில் போடப்பட்டு விட்டது என்பதை. என்னால் எளிதில் கடந்து போய் விட முடியவில்லை.
எங்களுக்கு நிகழ்ந்த கொடுந்துயர் வேறு எங்கும் யாருக்கும் நிகழக்கூடாது. எமது மக்களின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும். இந்த இரண்டும் தான் எமது மக்களின் பிரதிநிதியாக எனது வேண் டுகோள்.
எமது மக்களின் இழப்பை யாராலும் ஈடு செய்ய முடியாது என் றாலும், காலம் எமது மக்களுக்கு எல்லாவற்றையும் எதிர் கொள்கிற வ ல்லமையை வழங்கட்டும்.
அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சியின் துளிர் மறுபடியும் துளிர்க்கட்டும். ஒவ்வொருவருக்கும் எனது பேரன்பும், ஆறுதலும், அரவணைப்பும்” என பதிவிட்டுள்ளார்.