திரு​வண்​ணா​மலை ஊழல் தடுப்பு மற்​றும் கண்​காணிப்பு பிரிவு காவல் துணை கண்​காணிப்​பாளர் அலு​வல​கத்​தில் விசா​ரணைக்கு ஆஜராகி, வெளியே வந்த முன்​னாள் அமைச்​சர் எ.வ.வேலு.

 
தமிழகம்

ஏரியில் முறைகேடாக மண் அள்ளிய வழக்கில் விஜிலென்ஸ் அலுவலகத்தில் எ.வ.வேலு ஆஜர்

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: ஏரியில் முறைகேடாக மண் அள்ளிய வழக்கு தொடர்​பாக திமுக முன்​னாள் அமைச்​சர் எ.வ.வேலு​விடம் லஞ்ச ஒழிப்​புப் பிரிவு போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர்.

திரு​வண்​ணா​மலை மாவட்​டம் மலப்​பம்​பாடி ஏரி​யில் முறைகேடாக மண் அள்​ளப்​பட்ட வழக்​கின் விசா​ரணைக்​காக திரு​வண்​ணா​மலை லஞ்ச ஒழிப்​புப் பிரிவு அலு​வல​கத்​தில் திமுக முன்​னாள் அமைச்​சர் எ.வ.வேல் நேற்று ஆஜரானார்.

அவரிடம் சுமார் ஒரு மணி நேரம் விசா​ரணை நடை​பெற்​றது. விசா​ரணை முடிவுற்ற நிலை​யில், செய்​தி​யாளர்​களிடம் எ.வ.வேலு கூறும்​போது, “2025-ம் ஆண்டு டிசம்​பர் மாதம் திரு​வண்​ணா​மலை​யில் வடக்கு மண்​டல இளைஞர் அணி மாநாடு நடை​பெற்​றது. அந்த மாநாடு நடை​பெற்ற இடம் சமன்​செய்ய மலப்​பம்​பாடி ஏரி​யில் இருந்து அனுமதி​யின்றி மண் எடுத்​த​தாக ஊழல் தடுப்பு பிரி​வில் புகார் கொடுக்​கப்​பட்​டுள்​ளது. அதனடிப்​படை​யில் என்​மீது வழக்கு பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது. இந்த வழக்கு விசா​ரணைக்கு இன்று நேரடி​யாக ஆஜராகினேன்.

அவர்​களது விசா​ரணைக்கு முழு ஒத்​துழைப்பு அளித்​துள்​ளேன். தவெக அரசு திட்​ட​மிட்டு என்​மீது தவறான, பொய்​யான ஒரு வழக்கை பதிவு செய்​துள்​ளது. நீதி​மன்​றத்​தின் மூலம் நல்ல தீர்ப்பு கிடைக்​கும் என்ற நம்​பிக்கை உள்​ளது. நெடுஞ்​சாலை துறை​யில் ஊழல் நடந்​துள்​ள​தாக அமைச்​சர் ஆதவ் அர்​ஜூனா கூறிவரு​கிறார்.

நெடுஞ்​சாலைத்​துறை​யில் 2 ஆயிரம் கோடிக்கு மேல் பேட்ச் ஒர்க் ஊழல் நடந்​துள்​ள​தாகவும், இது​குறித்து லஞ்ச ஒழிப்பு துறை​யில் ஒப்​படைக்க உள்​ளோம் என்​றும் கூறி வரு​கிறார். அவர்​கள் ஒப்​படைக்​கட்​டும். தவறாக இருந்​தால் யாராக இருந்​தா​லும் தண்​டனை அனுபவிக்​கட்​டும். சாலை பேட்ச் ஒர்க் என்​பது அதி​காரி அளவில் நடை​பெறு​வது தான். எந்த அமைச்​சராக இருந்​தா​லும் விதி​களுக்கு உட்​பட்டு தான் எதையும் செய்ய முடியும். தமிழகத்​தில் சட்​டம்-ஒழுங்கு மிகவும் மோச​மாக உள்​ளது” என்​றார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT