அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டை காலி செய்து, ராயப்பேட்டை தெய்வசிகாமணி தெருவில் உள்ள வீட்டுக்கு குடிபெயர்கிறார். படம்: எல்.சீனிவாசன்

 
தமிழகம்

எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை இழந்ததால் அரசின் செவ்வந்தி இல்லத்தை காலி செய்த பழனிசாமி

செய்திப்பிரிவு

சென்னை: நடந்து முடிந்த தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், அதி​முக குறைந்த தொகு​தி​களில் மட்டுமே வென்றதால் எதிர்க்​கட்​சித் தலை​வர் அந்​தஸ்தை இழந்​த நிலை​யில், பழனி​சாமி தான் தங்கி இருந்த அரசின் செவ்​வந்தி இல்​லத்தை காலி செய்து சென்னை ராயப்​பேட்​டை​யில் நேற்று குடியேறி​னார்.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, கடந்த 2011 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் எம்​எல்​ஏ​வாக வெற்றி பெற்​று, மறைந்த முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா தலை​மையி​லான அமைச்​சர​வை​யில் நெடுஞ்​சாலை துறை அமைச்​ச​ராக பதவி​யேற்​றார். அப்​போது அவருக்​கு, சென்னை பசுமைவழிச் சாலை​யில் உள்ள அரசின் செவ்​வந்தி இல்​லம் வழங்​கப்​பட்​டது. கடந்த 2016 தேர்​தலிலும் வெற்றி பெற்​று, ஜெயலலிதா அமைச்​சர​வை​யில் நீடித்​தார். அதனால், அரசின் செவ்​வந்தி இல்​லத்​திலேயே தங்கி இருந்​தார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கடந்த 2017-ல்முதல்​வ​ராக பொறுப்​பேற்​றார். அப்​போதும் செவ்​வந்தி இல்​லத்​திலேயே தங்கி இருந்​தார். அதன் பின்​னர் 2021 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் திமுக பெரும்​பான்மை பெற்று ஆட்​சி​யமைத்​தது. அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி எதிர்க்​கட்​சித் தலை​வ​ராக இருந்​தார். எதிர்க்​கட்​சித் தலை​வர் என்ற முறை​யில் அப்​போதும் செவ்​வந்தி இல்​லத்​திலேயே குடியிருந்து வந்​தார்.

2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதி​முக 47 இடங்​களில் மட்​டுமே வெற்றி பெற்​று, 3-ம் இடம் பிடித்​தது. இதனால் அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி எதிர்க்​கட்​சித் தலை​வர் அந்​தஸ்தை இழந்​தார். இந்​நிலை​யில், அரசு இல்​லங்​களை காலி செய்​யு​மாறு பழனி​சாமி மற்​றும் திமுக முன்​னாள் அமைச்​சர்​களுக்​கு, அரசு சார்​பில் கடிதம் அனுப்​பப்​பட்​டது.

அதனைத் தொடர்ந்து செவ்​வந்தி இல்​லத்தை காலி செய்த பழனி​சாமி, சென்னை ராயப்​பேட்​டை​யில் அதி​முக தலைமை அலு​வல​கம் அரு​கில் உள்ள புதிய வீட்​டில், முகூர்த்த நாளான நேற்று குடியேறி​யுள்​ளார். இனி கட்சி நடவடிக்​கைகளை அங்​கிருந்து கவனிப்​பார் என அதி​முக வட்​டாரங்​கள்​ தெரி​வித்​துள்​ளன.

SCROLL FOR NEXT