தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட குண்டடம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளர் கே.பானுமதியை ஆதரித்துப் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி.

 
தமிழகம்

விவசாயிகளை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தது தவெக: பழனிசாமி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

தாராபுரம்: விவசாயிகளை ஏமாற்றி தவெக ஆட்சிக்கு வந்ததாக தாராபுரத்​தில் நடை​பெற்ற தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் அதிமுக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி குற்றம் சாட்டினார்.

தாராபுரத்​தில் அதி​முக வேட்​பாளர் பானு​ம​தியை ஆதரித்து குண்​டடம் பகு​தி​யில் நேற்று அவர் பேசி​ய​தாவது: அதி​முக ஆட்​சி​யில் கரேனா கால​கட்​டத்​தில் ரேஷன் கடை​யில் விலை​யில்லா அரிசி, விலை​யில்லா பருப்​பு, எண்​ணெய் வழங்​கப்​பட்​டது. அந்த ஆண்​டில் கடின​மான சூழ்​நிலை​யில் அரசுக்கு வரு​வாய் இல்​லாத​போதும் தைப்​பொங்​கலுக்கு குடும்​பத்​துக்கு ரூ.2 ஆயிரம் கொடுக்​கப்​பட்​டது. தற்​போது நல்ல வரு​மானம் வரும்​போது ரேஷன் கடை​யில் ஒரு​வாரம் பொருட்​கள் கொடுக்​கப்​பட​வில்​லை.

கரோனா கால கட்​டத்​தில் விலை மதிக்​க​முடி​யாத மக்​களின் உயிரைக் காப்​பாற்​றியது அதி​முக அரசு. அனைத்து மாவட்​டங்​களுக்​கும் சுகா​தா​ரத் ​துறை அதி​காரி​களின் பேச்​சைக் கேட்​காமல் நானே நேரில் சென்று ஆய்வு நடத்​தினேன். விலைம​திக்க முடி​யாத உயிர்​களைக் காப்​பாற்றியது அதி​முக அரசு.

தவெக அரசின் தவறான நிர்​வாகத்​தின் காரண​மாக தென்னை விவ​சா​யிகள் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். தற்​போது​தான் தூர்​வாரு​வதற்கு நிதி ஒதுக்கி வரு​கின்​றனர். ஆனைமலை​யாறு- நல்​லாறு திட்​டத்தை நிறைவேற்​று​வதற்​காக நான் கேரளம் சென்​றேன். அதன் பிறகு ஆட்சி மாறிய​தால் அந்​தத் திட்​டம் கிடப்​பில் போடப்​பட்​டது.

அதி​முக ஆட்​சி​யில் நீடித்​திருந்​தால் இந்​தத் திட்​டம் நிறைவேற்​றப்​பட்​டிருக்​கும். நீர் மேலாண்​மை​யில் அதி​முக சாதனை படைத்​துள்​ளது. தவெக ஆட்​சி​யில் விவ​சா​யிகளின் கடன்​கள் முழு​மை​யாகத் தள்​ளு​படி செய்​ய​வில்​லை. மக்​களை​யும், விவ​சா​யிகளை​யும் ஏமாற்றித்தான் ஆட்​சிக்கு வந்​தது தவெக அரசு.

தவெக கொடுத்த வாக்​குறு​தி​களை நிறைவேற்​றாமல் மக்​களை​யும், விவ​சா​யிகளை​யும் ஏமாற்​றியது என்​ப​தால் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதி​முக​வுக்கு வாக்​களிக்க வேண்​டும். இவ்வாறு அவர் பேசினார்.

SCROLL FOR NEXT