சிவகாசியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி. அருகில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

 
தமிழகம்

“தமிழகத்தில் கஞ்சா விற்பதே ஆளும் கட்சிக்கு துணை நிற்பவர்கள்தான்” - பழனிசாமி குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

தமி​ழ​கத்​தில் கஞ்சா விற்​பதே ஆளுங்​கட்​சிக்கு துணை நிற்​பவர்​கள் தான். அதி​முக ஆட்​சிக்கு வந்த 3 மாதங்​களில் தமி​ழ​கத்​தில் கஞ்சா ஒழிக்​கப்​படும் என சிவகாசி​யில் நடந்த பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி பேசி​னார்.

சிவ​காசி பேருந்து நிலை​யம் அருகே விருதுநகர் மாவட்​டத்​தில் உள்ள 7 தொகு​தி​களில் போட்​டி​யிடும் அதி​முக கூட்​டணி வேட்​பாளர்​களை அறி​முகம் செய்து பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி பிரச்​சா​ரம் செய்​தார். அப்​போது அவர் பேசி​ய​தாவது: காவிரி - குண்​டாறு திட்​டம் மூலம் மேட்​டூர் அணை​யின் உபரி நீரை கால்​வாய் வெட்டி சிவகங்கை புதுக்​கோட்டை விருதுநகர் மாவட்​டத்​தில் வேளாண்மை வளர்ச்​சிக்கு உதவும். இத்​திட்​டத்​திற்கு அதி​முக ஆட்​சி​யில் ரூ.14 ஆயிரம் கோடி நிதி ஒதுக்​கப்​பட்​டு, நான் அடிக்​கல் நாட்டை வைத்​தேன்.

          

ஆனால் இத்​திட்​டத்தை திமுக திட்​ட​மிட்டு முடக்​கி​வைத்​துள்​ளது. மீண்​டும் அதி​முக ஆட்​சி​யில் இத்​திட்​டம் நிறை​வேற்​றப்​படும். இதன்​மூலம் விருதுநகர் மாவட்​டம் பசுமை​யாக மாறும். திமுக ஆட்​சி​யில் சிறுமி முதல் மூதாட்டி வரை பாது​காப்​பில்​லை. இப்​படிப்​பட்ட கேவல​மான ஆட்சி தொடர வேண்​டு​மா. நிரந்தர டிஜிபி நியமிக்க முடி​யாத பொம்மை முதல்​வர் தமி​ழ​கத்தை தமி​ழ​கத்தை ஆள்​கி​றார். நீதி​மன்​றம் உத்​தர​விட்​டும் டிஜிபி நியமிக்​க​வில்​லை.

எங்கே பார்த்​தா​லும் கஞ்​சா, போதை மாத்​திரை, சாக்​லேட், திர​வம் என பல ரூபத்​தில் போதை பொருட்​கள் விற்​பனை செய்​யப்​படு​கிறது. போதை ஆசாமிகளால் போலீசுக்கே பாது​காப்​பில்​லை. போதை ஆசாமிகளால் கொலை, கொள்​ளை, பாலியல் சீண்​டல் நடக்​காத நாளே இல்​லை. டிஜிபி ஒரு​வர் கஞ்​சாவை ஒழிக்க 2.0, 3.0, 4.0 என ஓ போட்​டுக்​கொண்டே ஓய்​வு​பெற்​று​ விட்​டார். ஏனெனில் கஞ்சா விற்​பதே ஆளுங்​கட்​சிக்கு துணை நிற்​பவர்​கள் தான். அதி​முக ஆட்​சிக்கு வந்த 3 மாதங்​களில் தமி​ழ​கத்​தில் கஞ்சா ஒழிக்​கப்​படும்.

நகராட்சி நிர்​வாகம் துறை​யில் நடந்த ஊழல் குறித்து அதி​முக ஆட்சி அமைந்​ததும் சம்​பந்​த​பட்ட அமைச்​சர் மற்​றும் அதி​காரி​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​படும். திமுக ஆட்​சி​யில் நிதி​யமைச்​ச​ராக இருந்த பி.டி.ஆர் தியாக​ராஜன் பேசி​ய​தாக வெளி​யான ஆடியோ​வில் முதல்​வர் மகனும், மரு​மக​னும் இரு ஆண்​டு​களில் ரூ.30 ஆயிரம் கோடி சம்​பா​தித்து உள்​ள​தாக பேசி​யது குறித்து முதல்​வர் இது​வரை பதில் அளிக்​க​வில்​லை.

இந்​தி​யா​வில் நம்​பர் ஒன் மாநிலம் தமி​ழ​கம் என்​கி​றார் முதல்​வர். ஊழல் செய்​வ​தில் இந்​தி​யா​வில் நம்​பர் 1 ஆட்சி திமுக அரசு. ஊழலுக்கு கலைக்​கப்​பட்ட அரசு திமுக அரசு. திமுகவை​யும், ஊழலை​யும் பிரிக்க முடி​யாது. கடந்த 5 ஆண்​டு​களில் ரூ.5 லட்​சம் கோடி கடன் வாங்கி வைத்து விட்​டார்​. ஸ்​டா​லின் மாடல் அரசு பெயி​லியர் மாடல் அரசு, பை, பை, ஸ்டா​லின்.இவ்​வாறு அவர் பேசி​னார்.

SCROLL FOR NEXT