மதுராந்தகம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத்தை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி.

 
தமிழகம்

துரோகிகளுக்கும், துணை போனவர்களுக்கும் தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும்: மதுராந்தகம் வாக்காளர்களுக்கு பழனிசாமி அழைப்பு

செய்திப்பிரிவு

மதுராந்தகம்: அ​தி​முக தொண்​டர்​கள் மற்​றும் வாக்​காளர்​களின் உழைப்​பால் வெற்றி பெற்​று​விட்​டு, பதவி ஆசைக்​காக​வும், பெட்டி வாங்​கிக் கொண்​டும் மாற்​றுக்கட்​சிக்​குத் தாவிய துரோகி​களுக்​கும், அவர்​களுக்​குத் துணை போனவர்​களுக்​கும் இந்த இடைத்​தேர்​தலில் மக்​கள் தகுந்த பாடம் புகட்ட வேண்​டும் என்று அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி பேசி​னார்.

மது​ராந்​தகம் சட்​டப்​பேர​வைத் தொகுதி இடைத்​தேர்​தலை​யொட்டி அதி​முக வேட்​பாளர் கணிதா சம்​பத்தை ஆதரித்து நேற்று நடை​பெற்ற பிரச்​சா​ரத்​தில் பழனி​சாமி பேசி​ய​தாவது: கடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதி​முக மீண்​டும் ஆட்​சிக்கு வர வேண்​டும் என்​றும், மக்​களுக்​காக உழைக்க வேண்​டும் என்​றும் விரும்பி தொண்​டர்​களும், கூட்​ட​ணிக் கட்​சி​யினரும் இரவு பகலாக உழைத்​தனர்.

மக்​கள் இரட்டை இலை சின்​னத்​துக்கு வாக்​களித்து அதி​முக வேட்​பாளரை வெற்றி பெறச் செய்​தனர். ஆனால், வாக்​களித்த மக்​களைப் பற்​றியோ, தங்​களுக்​காக உழைத்த கட்​சி​யினர் மற்​றும் கூட்​ட​ணிக் கட்​சி​யினரின் உழைப்​பைப் பற்​றியோ சிந்​திக்​காமல், குதிரைப் பேரத்​தின் மூலம் பெட்டி வாங்​கிக்​கொண்டு பதவியை ராஜி​னாமா செய்​து​விட்டு மாற்​றுக் கட்​சிக்​குச் சென்​றுள்​ளனர். இதனால் மக்​கள் விரும்​பாத இடைத்​தேர்​தல் ஏற்​பட்​டுள்​ளது.

ஒரு கட்​சி​யில் வெற்றி பெற்ற சட்​டப்​பேரவை உறுப்​பினரை விலைக்கு வாங்​கி, தங்​கள் கட்​சி​யில் இணைத்​துக்​கொண்​டு, அவரைப் பக்​கத்​தில் வைத்​துக் கொண்டு வேட்​பாளர் அறி​முகம் செய்​வதும், வீர​வசனம் பேசுவதும் எந்த வகை​யில் நியா​யம். இது ஜனநாயகத்​துக்கு எதி​ரான செயலாகும். பெண்​கள் மற்​றும் குழந்​தைகளுக்கு எதி​ரான குற்​றங்​களில் ஈடு​பட்​ட​வர்​களைக் காப்​பாற்ற தமிழக அரசு முயன்​றது.

நீதி​மன்​றத்​தில் வழக்​கு​கள் விசா​ரணைக்கு வந்​த​போதெல்​லாம் அரசு வழக்​கறிஞர்​கள் மூலம் தொடர்ந்து வாய்தா கேட்டு வழக்​கு​களை நீட்​டித்​தனர். இறு​தி​யில் நீதி​மன்​றம் கடுமை​யான கண்​டனம் தெரி​வித்து உடனடி​யாக கைது செய்ய உத்​தர​விட்ட பின்​னரே கைது நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்​டது.

அதி​முக ஆட்​சிக் காலத்​தில் மது​ராந்​தகம் மற்​றும் செங்​கல்​பட்டு மாவட்​டப் பகு​தி​களில் மேற்​கொள்​ளப்​பட்ட உள்​கட்​டமைப்​பு, விவ​சா​யம் மற்​றும் மக்​கள் நலத் திட்​டங்​களை மக்​கள் மறக்க மாட்​டார்​கள்.

துரோக அரசி​யலுக்கு முற்​றுப்​புள்ளி வைத்​து, அதி​முக வேட்​பாள​ருக்கு இரட்டை இலை சின்​னத்​தில் வாக்​களித்து பெரு​வாரி​யான வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் அவர்களை வெற்றி பெறச் செய்ய வேண்​டும். இவ்​வாறு பேசி​னார்.

பிரச்​சா​ரத்​தில் கூட்​ட​ணிக் கட்​சிகளின் நிர்​வாகி​கள், அதி​முக முன்​னாள் அமைச்​சர்​கள், சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள், மாவட்​டச் செய​லா​ளர்​கள், தொண்​டர்​கள் மற்​றும் பொது​மக்​கள் திரளாகப் பங்​கேற்​றனர்​.

SCROLL FOR NEXT