தமிழகம்

தமிழக விவசாயிகளுக்காக குரல் கொடுக்கும் கட்சி அதிமுக: தாராபுரம் தேர்தல் பிரச்சாரத்தில் பழனிசாமி கருத்து

செய்திப்பிரிவு

திருப்பூர்: ​விவ​சா​யிகளுக்​காக குரல் கொடுக்​கும் கட்சி அதி​முக என்று தாராபுரம் பகு​தி​யில் நடை​பெற்ற தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி பேசி​னார்.

திருப்​பூர் மாவட்​டம் தாராபுரம் சட்​டப்​பேர​வைத் தொகு​தி​யில் நடை​பெறும் இடைத்​தேர்​தலில் அதி​முக வேட்​பாளர் பானு​ம​தியை ஆதரித்து கன்​னி​வாடி பகு​தி​யில் கட்சியின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி பேசி​ய​தாவது: விவ​சா​யிகளுக்கு குடிம​ராமத்து திட்​டம் செய்து கொடுத்​தோம். இப்​போது அண்​மையில் சட்​டப்​பேரவை கூட்​டத்​தில் கனிமவளத்​துறை அமைச்​சரிடம் குடிம​ராமத்து திட்​டம் மூலம் ஏரி​களை தூர்​வாற நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று வலியுறுத்தி

னேன். அதி​முக தான் விவ​சா​யிகளுக்​காக குரல் கொடுக்​கிறகட்​சி. ஆட்​சி​யில் இருக்​கிற போதும், இல்​லாத​போதும் சட்​டப்பேர​வை​யில் விவ​சா​யிகள் குரலாக ஒலிக்​கிறோம்.

விவ​சா​யிகளுக்​காக ஆராய்ச்சி நிலை​யத்​தில் ஆடு களை உரு​வாக்கி இருக்​கிறோம். ஒரு ஆண்​டுக்கு 40 கிலோ ஆடுகிடைக்​கும். நான் வெளி​நாடு சென்​ற​போது, அங்குள்ள பண்ணையில் ஒரு பசு ஒரு நாளைக்கு 65 லிட்​டர் பால் கறப்​பதை பார்​வை​யிட்​டேன். இதையொட்டி தமிழகத்​தில் ஆராய்ச்சி மையம் மூலம் கலப்​பின பசு உரு​வாக்கி தர திட்​ட​மிட்டுபணி செய்​தோம். ஆனால் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்டு விட்டது.

லண்​டனில் முதல்​வர் தமிழ்​நாட்டு தொழில் முதலா​ளி​களை சந்​தித்து பேசி​னார். அடுத்ததாக சுவிட்​சர்​லாந்து போகிறா​ராம். எங்கே போனாலும் சரி மக்​களுக்கு நல்ல திட்​டம் கொடுங்​கள். இங்கே இருக்​கிற விவ​சா​யிக்கு காலுக்கு செருப்​பில்​லை. உடுக்க உடை​யில்​லை. இந்த நிலை​மை​யில் உங்​கள் வசதிக்​காக கடன் வாங்கி சட்​டப்​பேர​வைக் கட்ட வேண்​டு​மா?

அதே​போல முதல்​வர் அறை இருக்​கிறது. இதில், அண்​ணா, எம்​ஜிஆர், அம்மா என அனைவரும் பணி​யாற்​றினோம். இவருக்கு மட்​டும் பிடிக்​க​வில்​லையாம். நாமக்​கல் கவிஞர் மாளி​கை​யில் 40 ஆயிரம் சதுரடி எடுத்​துக்​கொண்டு சொகு​சாக சீரமைக்​கிறார். ஜன்​னலை திறந்​தால் கடல் காற்று பட வேண்​டும் என்​றால் அதற்கு ஏழை மக்​கள் பணம்தான் கிடைத்​த​தா?

ஒவ்​வொரு ரூபா​யும் மக்​கள் பணம். தவெக முதல்​வர் காஸ்ட்லி முதல்​வ​வாக இருக்​கிறார். சனி மற்றும் ஞாயிறுக்கிழமை விடு​முறை வேறு. இப்​படிப்​பட்ட முதல்​வரை இந்​தி​யா​வில் யாரும் பார்த்​த​தில்​லை. தவெகவை எதிர்த்து கம்​யூனிஸ்ட் கட்​சி​யினர் போட்​டி​யிடு​கின்​றனர். மீண்​டும் ஒரு தேர்​தல் வரக்​கூ​டாது என ஆதரிக்​கின்​றனர். பல முறை எச்​சரித்​து​ விட்​டனர். தொடர்ந்து இதே நிலை நீடித்​தால் ஆதரவை வாபஸ் வாங்​கு​வோம் என கம்​யூனிஸ்ட் கட்​சி​யினர் கடுமையாக எச்​சரிக்கை விடுத்துள்ளனர். இவ்​வாறு அவர் பேசி​னார்​.

SCROLL FOR NEXT