அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகதில் பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்றது.படம்:எஸ். சத்தியசீலன்

 
தமிழகம்

‘அதிமுக வெற்றிக்குத் தீவிரமாக பணியாற்றுங்கள்’ - மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பழனிசாமி அறிவுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் நடை​பெற உள்ள 5 தொகுதி இடைத்​தேர்​தலில்​களில் அதிமுக வெற்​றிக்குத் தீவிர பணி​யாற்​றுங்​கள் என்று மாவட்டச் செய​லா​ளர்​கள் கூட்​டத்​தில் கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பழனிசாமி அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

அதிமுக மாவட்டச் செய​லா​ளர்​கள் ஆலோ​சனைக் கூட்​டம் கட்​சி​யின் பொதுச்​செய​லா​ளர் பழனிசாமி தலை​மையில், சென்னை ராயப்​பேட்​டை​யில் உள்ள கட்சி தலைமை அலு​வல​கத்​தில் நேற்று நடை​பெற்​றது. இக்​கூட்​டத்​தில் மாவட்ட வாரியாக உள்ள உட்​கட்சி விவகாரங்​கள் குறித்து மாவட்டச் செய​லா​ளர்​களிடம் பழனிசாமி கேட்​டறிந்​தார்.

பின்​னர் கூட்​டத்​தில் அவர் பேசிய​தாவது: தமிழகத்​தில் காலியாக உள்ள 5 சட்​டப்​பேரவைத் தொகுதி​களுக்​கான இடைத்​தேர்​தல் அறி​விப்பு எப்​போது வேண்​டு​மானாலும் வரலாம். அதை எதிர்​கொள்ள மாவட்டச் செய​லா​ளர்​கள் தயாராக இருக்க வேண்​டும். அத்​தொகுதி​களில் அதிமுக வெற்​றிக்கு களப்​பணிகளை இப்​போதே தொடங்​குங்​கள், தீவிர​மாக களப்​பணி​யாற்​றுங்​கள். தகுதி​யான வேட்​பாளர்​களை​யும் தேர்வு செய்து வையுங்​கள்.

ஆளுங்​கட்சி எப்​போதும் அதி​கார பலத்​தில் இருக்​கும். இருப்​பினும் அதை எதிர்​கொண்டு அரசி​யல் செய்ய வேண்​டும். தோல்​வி​களை கண்டு கலங்க வேண்​டாம். தோல்​வி​களை வெற்​றிப்​படிக்​கட்​டுகளாக மாற்​றிய​வர் தான் முன்​னாள் முதல்​வர் ஜெயலலிதா. அது​தான் அதிமுக​வின் வரலாறு.

கட்சி மீது அதிருப்​ப​தி​யில் இருப்​பவர்​களைப் பற்றி கவலைப்​பட வேண்​டாம். வரும் நவ.12-ம் தேதி வரைவு வாக்​காளர் பட்​டியல் வெளியீடு, வாக்​காளர் பட்​டியல் திருத்​தும் பணி தொடங்​கு​கிறது. அதில் யாருடைய பெயராவது நீக்​கப்​பட்​டிருந்​தால், உடனடி​யாக சேர்க்க நட​வடிக்கை எடுக்க வேண்​டும். ஆளுங்​கட்​சி​யினர் ஏதேனும் முறைகேட்​டில் ஈடு​பட்​டால் உடனடி​யாக, அதிமுக சட்ட அணி​யினருடன் தொடர்​பு​கொண்டு, அந்​தந்த மாவட்ட தேர்​தல் அதி​காரி​களிடம் புகார் அளிக்க வேண்​டும்.

கட்​சி​யில் இளைஞர்​கள் மற்​றும் மகளிரை அதிக அளவில் சேர்க்க வேண்​டும். தவெக அரசின் அவலங்​களை, மக்​கள் விரோத செயல்​களை, மின்வெட்டு, சட்​டம் ஒழுங்கு சீர்​கேடு உள்​ளிட்​ட​வற்றை மக்​கள் மத்​தி​யில் கொண்​டு​போய் சேருங்​கள். இவ்​வாறு அவர் பேசினார்.

இக்​கூட்​டத்​தில் கட்​சி​யின் அவைத் தலை​வர் தமிழ்​மகன் உசேன், துணைப் பொதுச்​செய​லா​ளர் கே.பி.முனுசாமி, பொருளாளர் திண்​டுக்​கல் சீனிவாசன், தலைமை நிலையச் செய​லா​ளர் வரகூர் அருணாச்​சலம் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

அதிமுக​வில் வெள்​ளத்​துரை: தமிழகத்​தில் நடை​பெற்ற அயோத்​தி​குப்​பம் வீரமணி, சந்​தனக்​கடத்​தல் வீரப்​பன் உள்​ளிட்​டோர் என்​கவுன்​டர்​களில் முக்​கிய பங்​காற்​றிய​வர் எஸ்.வெள்​ளத்​துரை. இவர், சசிகலா தொடங்​கிய அனைத்​திந்​திய புரட்​சித் தலை​வர் மக்​கள் முன்​னேற்​றக் கழகம் சார்​பில் கடந்த சட்​டப்​பேரவைத் தேர்​தலில் நாங்​குநேரி தொகுதி​யில் போட்​டி​யிட்டு சுமார் 1000-க்​கும் மேற்​பட்ட வாக்​கு​களை பெற்​றிருந்​தார். இந்​நிலை​யில், சென்​னை​யில் நேற்று பொதுச்​செய​லா​ளர் பழனிசாமி முன்​னிலை​யில் வெள்​ளத்​துரை அதிமுக​வில் இணைந்​தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT