தமிழகம்

குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்குவதைவிட மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே முக்கியம்: நாராயணன் திருப்பதி கருத்து

செய்திப்பிரிவு

சென்னை: பாஜக மாநில துணைத் தலை​வர் நாராயணன் திருப்​பதி நேற்று சென்​னை​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: காங்​கிரஸ், திமுக போன்ற கட்​சிகள் தேர்​தலில் தோல்​வியடை​யும் போதெல்​லாம் தேர்​தல் ஆணை​யம், நீதித் துறை, ராணுவம் மீது குற்​றம் சுமத்து​கின்றன.

அந்த வகை​யில், தேர்​தல் ஆணை​யர்​கள் இடையே கருத்து வேறு​பாடு இருப்​ப​தாக எதிர்க்​கட்​சிகள் வதந்தி பரப்​பு​கின்​றன. தேர்​தல் ஆணை​யர்​கள் மூவரும் இணைந்​து, ஒரு​மித்த கருத்​துடனேயே முடிவு​களை எடுக்​கின்​றனர்.

வாக்​காளர் பட்​டியல் சிறப்​புத் திருத்​தம் மூலம் லட்​சக்​கணக்​கான போலி வாக்​காளர்​கள் நீக்​கப்​பட்​டு, நாட்​டின் ஜனநாயகம் பலப்​படுத்​தப்​பட்​டுள்​ளது.

தமிழகத்​தில் ஆட்சி அமைத்த 100 நாட்​களி​லேயே சட்​டம் - ஒழுங்கு தொடர்​பான தகவல்​களை, ஆர்​டிஐ வரம்​பில் இருந்து நீக்​கு​வதற்கு தவெக அரசு ரகசி​ய​மாக முயற்சி மேற்​கொண்​டது சர்​வா​தி​காரப் போக்​கு. கடும் எதிர்ப்பு வந்​ததும் அந்த உத்​தரவை வாபஸ் பெற்​றுள்​ளனர்.

அரசுப் பள்​ளி​களில் பெண் குழந்​தைகளுக்​குப்பாது​காப்​பற்ற சூழல் நில​வு​கிறது. ஆசிரியர்​கள், ஊழியர்​களாலேயே மாணவி​களுக்கு பாலியல் தொல்​லைகள் ஏற்​படும் சம்​பவங்​கள் அதி​கரிக்​கின்​றன. இது அரசின் நிர்​வாகத் தோல்​வியைக் காட்​டு​கிறது.

தங்க மோதிரம் வழங்​கு​வதை​ விட, பள்​ளிகளில் பெண் குழந்​தைகளின் பாது​காப்பை உறுதி செய்​வதே முக்​கி​யம். ஜெம் வீரமணி வழக்கில் பா​திக்​கப்​பட்ட குழந்​தைகளுக்கு நீதி கிடைக்க வழக்கை உடனே சிபிஐக்​கு மாற்​ற வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

SCROLL FOR NEXT