படம்: லென்ஸ் சீனு
சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை எண்ணூரில் 26 செ.மீ மழையும், பாரிமுனையில் 25 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
டிட்வா புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலவும் சூழலில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில், பதிவான மழையின் அளவு விவரம்:
பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): மண்டலம் 1 எண்ணூர் (சென்னை) 26, மண்டலம் 5 பாரிமுனை (சென்னை) 25, மண்டலம் 09 ஐஸ் ஹவுஸ் (சென்னை) 22, மண்டலம் 02 மணலி புதுநகரம் (சென்னை), பொன்னேரி (திருவள்ளூர்) தலா 21, எண்ணூர் AWS (திருவள்ளூர்), மண்டலம் 5 பேசினபரிட்ஜ் (சென்னை), சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை), பெரம்பூர் (சென்னை) தலா 20, சென்னை (N) AWS (சென்னை), மண்டலம் 02 மணலி (W 17) (சென்னை). செங்குன்றம் (திருவள்ளூர்) தலா 19 சென்டிமீட்டர் அளவில் மழை பெய்துள்ளது.
மேலும், மண்டலம் 01 விம்கோ நகர் (சென்னை), சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை), டிஜிபி அலுவலகம் (சென்னை), மண்டலம் 14 மேடவாக்கம் சந்திப்பு (சென்னை) தலா 18, அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), CD மருத்துவமனை தண்டையார்பேட்டை (சென்னை), ரும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), மண்டலம் 04 தண்டையார்பேட்டை (சென்னை), மண்டலம் 1 கத்திவாக்கம் (சென்னை) தலா 17 சென்டிமீட்டர் அளவில் மழை பெய்துள்ளது.
புழல் ARG (திருவள்ளூர்), மண்டலம் 10 சைதாபேட்டை (சென்னை) தலா 15, மண்டலம் 18 அமைந்தக்கரை (சென்னை) மண்டலம் 16 அம்மிஞ்சிகரை (சென்னை) தலா 15, எம்ஜிஆர் நகர் (சென்னை), சோழவரம் (திருவள்ளூர்), மண்டலம் 33 அடையார் (சென்னை) 14, மண்டலம் 5 காசிமேடு (சென்னை), மண்டலம் 13 வேளச்சேரி (சென்னை) அண்ணர் பல்கலைக்கழகம் (சென்னை) தலா 3, YMCA நந்தனம் ARG (சென்னை), மண்டலம் 11 வளசரவாக்கம் (சென்னை), மண்டலம் 11 வளசரவாக்கம் (W152), (சென்னை) மண்டலம் 05 மாதவரம் (சென்னை), மண்டலம் 3 பழல், (சென்னை), வில்லிவாக்கம் AMRG (திருவள்ளூர்), மண்டலம் 11 நெற்குன்றம் (சென்னை), மண்டலம் 13 ராஜா அண்ணாமலைநகர் (சென்னை), மண்டலம் 7 கொரட்டூர் (W84) (சென்னை) தலா 12 சென்டிமீட்டர் அளவில் மழை பெய்துள்ளது.
சோழிங்கநல்லூர் (சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை), மண்டலம் 14 மடிப்பாக்கம் (சென்னை), மண்டலம் 15 ஈஞ்சம்பாக்கம் (சென்னை), மண்டலம் 15 கண்ணடு நகர் (W196) (சென்னை), மண்டலம் 14 பள்ளிக்கரணை (190) (சென்னை), மண்டலம் 02 D 15 மணலி (சென்னை) தலா 11 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மண்டலம் 01 திருவொற்றியூர் (சென்னை), மண்டலம் 7 கொரட்டூர் (W26) (சென்னை). மண்டலம் 5 சென்னை சென்ட்ரல் (சென்னை), மண்டலம் 8 அண்ணாநகர் மேற்கு (சென்னை) 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
வானிலை முன்னறிவிப்பு: இன்று (டிச.2) திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்யக்கூடும். வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் அவ்வப்பொழுது பலத்த தரைக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர வேகத்தில் வீசக்கூடும்.
நாளை (டிச.3) நீலகிரி, ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.