தமிழகம்

திருட்டுத் தங்கம் வாங்கிய விவகாரம்: தனியார் நிறுவனத்தின் 16 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

செய்திப்பிரிவு

சென்னை: ​திருட்​டுத் தங்​கத்தை வாங்கி சட்​ட​விரோத பணிப்​பரி​மாற்​றத்​தில் ஈடு​பட்​ட​தாக தனியார் நிறு​வனத்​துக்​குச் சொந்​த​மான 16 இடங்​களில் அமலாக்​கத்​துறை சோதனை நடத்​தி​யது. 2 நாட்​கள் நடத்​திய சோதனை​யில் ரொக்​கம், தங்​கம் மற்​றும் வெளி​நாட்டு நாண​யங்​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளது.

வாடிக்​கை​யாளர்​களிடம் உள்ள பழைய தங்க நகைகள் மற்​றும் அடகு வைக்​கப்​பட்ட தங்​கத்தை வாங்​கி, அதற்கு அன்​றைய சந்தை விலைக்கு ஏற்ப உடனடிப் பணம் வழங்​கும் பிரபல வணிக நிறு​வன​மான தனியார் நிறுவனம் பெங்​களூரை தலை​மை​யிட​மாக கொண்டு செயல்​படு​கிறது.

இந்​நிறு​வனம், அதன் பங்​கு​தா​ரர்​கள் மற்​றும் இயக்​குநர்​கள், திருட்​டுத் தங்க நகைகள் மற்​றும் பொருட்​களை வாங்​குதல் மற்​றும் பதுக்​குதல் போன்ற சட்​ட​விரோத நடவடிக்​கை​களில் ஈடு​பட்டு வரு​வ​தாக பல்​வேறு காவல் நிலை​யங்​களில் வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட்​டு, குற்​றப்​பத்​திரி​கைளும் தாக்​கல் செய்​யப்​பட்​டிருந்​தன.

அந்​தவகை​யில், காவல்​துறை​யின் எஃப்​.ஐ.ஆர்​-களை அடிப்​படை​யாகக் கொண்டு சட்​ட​விரோத பணப்​பரிவர்த்​தனை தடுப்பு சட்​டத்​தின் கீழ் அமலாக்​கத்​துறை​யும் தனி​யாக விசா​ரணையை தொடங்​கியது.

விசா​ரணை​யில், இந்​நிறு​வனம், திருட்டு நகைகளை வாங்​கி, அதன்​மூலம் பெரு​மள​வில் சட்​ட​விரோதப் பணத்​தைப் பரி​மாற்​றம் செய்​தது முதற்​கட்ட விசா​ரணை​யில் உறுதி செய்​யப்​பட்​டுள்​ளது.

இதன் அடிப்​படை​யில், கடந்த 23, 24 ஆகிய தேதி​களில் பெங்​களூரு, சென்​னை, ஐதரா​பாத், விசாகப்​பட்​டினம் உள்பட 16 இடங்​களில் அமலாக்​கத்​துறை சோதனை நடத்​தி​யது.

இந்த சோதனை தொடர்​பாக அமலாக்​கத்​துறை வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டிருப்​ப​தாவது: திருட்டு தங்க நகைகளைத் தொடர்ச்​சி​யாக வாங்​கிச் சட்​ட​விரோத​மாகப் பணம் சேர்த்​த​தாக எழுந்த புகாரின் பேரில், தனியார் நிறு​வனத்​துக்​குச் சொந்​த​மான இடங்​களில் அமலாக்​கத்​துறை தீவிர சோதனை நடத்​தி​யுள்​ளது.

பெங்​களூரு, சென்​னை, ஐதரா​பாத் மற்​றும் விசாகப்​பட்​டினம் ஆகிய நகரங்​களில் அமைந்​துள்ள தனியார் நிறு​வனத்​தின் தலைமை அலு​வல​கம், கிளை​கள், அதன் இயக்​குநர்​கள், முன்​னாள் இயக்​குநர்​கள் மற்​றும் பங்​கு​தா​ரர்​களின் வீடு​கள் உட்பட மொத்​தம் 16 இடங்​களில் இந்​தச் சோதனை நடத்​தப்​பட்​டது.

இந்​நிறு​வனத்​துடன் தொடர்​புடைய முக்​கிய நபர்​களான பி. எஸ். அயூப் (எ) பொம்​மனஹள்ளி பாபு, ஒபேதுல்லா ஏ, முகமது சல்​மான் ஏ மற்​றும் அர்​பின் தாஜ் ஏ ஆகியோர் இந்த சட்​ட​விரோத குற்ற நடவடிக்​கைகள் மூலம் பெரு​மளவி​லான சொத்​துக்​களை சேர்த்​துள்​ளது கண்​டறியப்​பட்​டுள்​ளது.

சோதனை நடை​பெற்ற போது, இவர்​கள் ஒத்​துழைப்பு வழங்​காமல் தலைமறை​வாகி​ விட்​டனர். மேலும், சோதனைக்கு உட்​படுத்​தப்​பட்ட வணிக நிறு​வனங்​களில் பணி​யாற்​றும் ஊழியர்​களும் சோதனை சமயத்​தில் அங்கு இருக்​கக்​கூ​டாது என இவர்​களால் முன்​கூட்​டியே அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

இரு நாட்​கள் நடை​பெற்ற தீவிர சோதனை​யின் முடி​வில், குற்​றச் செயல்​கள் மூலம் ஈட்​டப்​பட்ட ரூ. 7,52,000 ரொக்​கப் பணம், கணக்​கில் வராத பெரு​மளவி​லான வெளி​நாட்டு நாண​யங்​கள், தங்க நகைகள் மற்​றும் வெள்ளி ஆபரணங்​கள் ஆகியவை கைப்​பற்​றப்​பட்​டுள்​ளன. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT