சென்னை: அமைச்சர்கள், எம்எல்ஏக்களின் சிபாரிசை பயன்படுத்தக் கூடாது என்று அரசு ஊழியர்களுக்கு வேலைவாய்ப்புத் துறை தடை விதித்துள்ளது. மீறும் அரசு ஊழியர்கள் மீது துறைரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து வேலைவாய்ப் புத் துறை கூடுதல் இயக்குநர் ராஜசேகர், துறைசார்ந்த அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தனிப்பட்ட கோரிக்கைகள் இந்த துறையின்கீழ் பல்வேறு அலுவலகங்களில் பணிபுரிந்து வரும் சில அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள், பணி இடமாறுதல், பதவி உயர்வு உள்ளிட்ட இதர தனிப்பட்ட கோரிக்கை களுக்காக உரிய நிர்வாக வழியைப் பின்பற்றாமல், அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள் மற்றும் முதல்வரின் முகவரிப் பிரிவுக்கு நேரடியாக மனு அளிப்பது தெரியவந்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகளின்படி அரசு ஊழியர்கள் தங்கள் சேவை குறித்த விவகாரங்களில் சாதகமான ஆணைகள் அல்லது சலுகைகளைப் பெறுவதற்காக வெளி செல்வாக்கையோ அல்லது வேறு அரசியல் செல்வாக்கையோ பயன்படுத்தக் கூடாது.
மேலும், குறைகளை மேலதிகாரிகளிடம் தெரிவிக்கும்போது, உரிய அதிகாரப்பூர்வ வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இந்த விதிகளை மீறுவது நடத்தை விதிமீறலாகக் கருதப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள் ளப்படும்.
வரும்காலங்களில் பணியாளர்கள் தங்கள் கோரிக்கைகள் அல்லது குறைகளை, துறைத் தலைவர் வழியாக உரிய நிர்வாக நடைமுறையைப் பின்பற்றி மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். துறைத் தலைவரின் முன் அனுமதியின்றி நேரடியாக அமைச்சர்கள், எம்எல்ஏ.க்கள் அல்லது முதல்வர் அலுவலகத்துக்கு மனு அனுப்புவதையும், அரசியல் செல்வாக்கை பயன்படுத்த முயற்சிப்பதையும் தவிர்க்க வேண்டும்.
ஒழுங்கு நடவடிக்கை: இதை மீறி யாரேனும் நேரடியாக மனு சமர்ப்பிப்பது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது உரிய விதிகளின்கீழ் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.