சென்னை: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக முதல்வரின் முகாம் அலுவலகமான சென்னை பாமினி இல்லத்தில், முதல்வர் விஜய் தலைமையில் நேற்று இரவு 7.30 மணி அளவில் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில், சட்டத் துறை அமைச்சர் நிர்மல்குமார் உட்பட முக்கிய அமைச்சர்கள், சட்டத் துறை வல்லுநர்கள், தலைமைச் செயலர் எம்.சாய்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு, அடுத்த கட்ட நடவடிக்கைகள், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதில் மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா காணொலி வாயிலாக பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.