சென்னை: தமிழக மின் வாரியம் வெளியிட்ட அறிக்கை: நுகர்வோருக்கு மேம்பட்ட மற்றும் விரைவான சேவைகளை வழங்கும் நோக்கில், தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் தனது தாழ்வழுத்த பில்லிங் மென்பொருளை புதிய சர்வர்கள் மற்றும் தரவுகளை புதிய தரவுத்தளத்துக்கு ஏற்றவாறு மேம்படுத்தும் பணிகளை பல கட்டங்களாக மேற்கொண்டு வருகிறது.
இதன் காரணமாக, அடையார் மின்பகிர்மான வட்டத்தின் அடையார், ஐ.டி காரிடார், தாம்பரம், பல்லாவரம் மற்றும் சோழிங்கநல்லூர் கோட்டங்கள், சென்னை தெற்கு மின் பகிர்மான வட்டத்தின் கே.கே.நகர், போரூர், கிண்டி கோட்டங்கள் மற்றும் சென்னை மேற்கு மின் பகிர்மான வட்டத்தின் அண்ணாநகர், அம்பத்தூர், ஆவடி கோட்டங்கள் ஆகியவற்றின் மின் நுகர்வோர்கள் மின் கட்டண வசூல் தொடர்பான கவுண்டர் மற்றும் ஆன்லைன் சேவைகள், புதிய மின் இணைப்பு விண்ணப்ப சேவைகள் ஆகியவை இன்று (மே 23) முதல் நாளை (மே 24) இரவு 12 மணி வரை தற்காலிகமாக இயங்காது. பணிகள் நிறைவடைந்தவுடன் அனைத்து சேவைகளும் மீண்டும் செயல்படுத்தப்படும்.