தமிழகம்

தனியார் இடத்தில் மின்வாகன சார்ஜிங் மையம்: நில உரிமையாளர், நிறுவனம் ஒருங்கிணைக்க இணையதளம்

செய்திப்பிரிவு

சென்னை: தனி​யார் இடத்​தில் சார்ஜிங் மையம் அமைக்க நில உரிமை​யாளர்​கள், நிறு​வனங்​களை ஒருங்​கிணைக்க இணை​யதளத்தை மின்​வாரி​யம் ஏற்​படுத்​தவுள்​ளது. நாடு முழு​வதும் வாக​னங்​களால் ஏற்​படும் சுற்​றுச்​சூழல் பாதிப்​பைக் குறைக்க மின்​சார வாக​னங்​களைப் பயன்​படுத்த மத்​திய, மாநில அரசுகள் அறி​வுறுத்​தின.

இதற்​காக பல்​வேறு திட்​டங்​கள் அறி​முகப்​படுத்​தப்​பட்​டன. தற்​போது மின்​சா​ரத்​தில் இயங்​கும் இருசக்கர வாக​னங்​கள், கார், பேருந்து உள்​ளிட்ட வாக​னங்​களின் பயன்​பாடு​கள் அதி​கரித்து வரு​கின்​றன.

          

இந்த வாக​னங்​களுக்கு எளி​தான சார்ஜிங் வசதி கிடைக்க மாநகரில் தலா 3 கி.மீ. தொலை​விலும், நெடுஞ்​சாலைகளில் தலா 25 கி.மீ. தொலை​விலும் ஒரு சார்ஜிங் மையம் அமைக்​கப்பட உள்​ளது.

அரசுத் துறை​கள் நேரடி​யாக​வும், தனி​யார் நிறு​வனங்​கள் வாயி​லாக​வும் சார்ஜிங் மையங்​களை அமைக்​கும் பணி​யில் ஈடு​பட்​டுள்​ளன. சென்னை உள்​ளிட்ட முக்​கிய நகரங்​களில் சார்ஜிங் மையம் அமைக்க இடம் கிடைப்​பது சிரம​மாக உள்​ளது.

எனவே தனி​யார் இடத்​தில் சார்​ஜிங் மையம் அமைக்க, இடத்​தின் உரிமை​யாளர் மற்​றும் சார்​ஜிங் மையம் அமைக்​கும் நிறு​வனத்தை ஒருங்​கிணைக்க, தனி இணை​யதளத்தை உரு​வாக்​கும் பணி​யில் தமிழ்​நாடு பசுமை எரிசக்​திக் கழகம் ஈடு​பட்​டுள்​ளது.

இதுகுறித்து மின்​வாரிய அதி​காரி​கள் கூறிய​தாவது: இந்த இணை​யதளம் வாயி​லாக, சார்​ஜிங் மையம் அமைக்க இடம் வழங்க விரும்​பும் உரிமை​யாளர்​கள் தகவல் தெரிவிக்​கலாம். அந்த தளத்​தில் நிறு​வனங்​களின் விவரங்​களும் இருக்​கும். இருதரப்​பும் தங்​களுக்​குள் நேரடி​யாக பேசி சார்​ஜிங் மையம் அமைக்​கலாம்.

இடத்​தின் உரிமை​யாள​ருக்கு வாடகை வரு​வாய் கிடைக்​கும். நிறு​வனங்​களுக்கு விரை​வாக இடம் கிடைக்​கும் என்​ப​தால், அதற்கு ஏற்ப சார்​ஜிங் மையங்​களும் துரித​மாக அமைக்​கப்​படும். எனவே மின்​சார வாக​னங்​களுக்கு தடை​யின்றி சார்​ஜிங்​ வசதி கிடைக்​கும்​. இந்​தப்​ பணி இறு​திக்​ கட்​டத்​தை எட்​டி​யுள்​ளது. இவ்​​வாறு அவர்​கள்​ கூறினர்​.

SCROLL FOR NEXT