தமிழகம்

வேட்பு மனு தாக்கல் சென்னையில் எங்கே... யாரிடம்?

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று (30-ம் தேதி) காலை 11 மணிக்கு தொடங்கி ஏப்.6-ம் தேதி வரை நடக்கிறது. சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அந்த தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம்.

அதன் விவரம்: ஆர்.கே.நகர் தொகுதிக்கு டி.எச்.சாலையில் உள்ள தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும், தேர்தல் நடத்தும் அலுவலராக பி. பூங்கொடி உள்ளார், 8925960711 என்ற எண்ணில் அந்த தொகுதியில் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகாரளிக்கலாம்.

பெரம்பூர் தொகுதிக்கு வியாசர்பாடி, எருக்கஞ்சேரி உயர் சாலையில் டாக்டர் அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் தாக்கல் செய்ய வேண்டும், தேர்தல் நடத்தும் அலுவலராக எஸ். கீதா உள்ளார், 8925960712 என்ற எண்ணில் அந்த தொகுதியில் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகாரளிக்கலாம்.

          

கொளத்தூர் தொகுதிக்கு செம்பியம், பேப்பர் மில்ஸ் சாலையில் ஒருங்கிணைந்த சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும், தேர்தல் நடத்தும் அலுவலராக எஸ். சாந்தி உள்ளார், 8925960713 என்ற எண்ணில் அந்த தொகுதியில் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகாரளிக்கலாம்.

வில்லிவாக்கம் தொகுதிக்கு வில்லிவாக்கம், 4வது பிரதான சாலை, சிட்கோ நகரில் உள்ள சமுதாயக் கூடத்தில் தாக்கல் செய்ய வேண்டும், தேர்தல் நடத்தும் அலுவலராக எல். மைதிலி உள்ளார், 8925960714 என்ற எண்ணில் அந்த தொகுதியில் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகாரளிக்கலாம்.

திரு.வி.க நகர் தொகுதிக்கு பட்டாளம், ஸ்ட்ரஹான்ஸ் சாலையில் உள்ள திரு.வி.க நகர் மண்டல அலுவலகததில் தாக்கல் செய்ய வேண்டும், தேர்தல் நடத்தும் அலுவலராக எஸ். பால் பிரின்சி ராஜ்குமார் உள்ளார், 8925960715 என்ற எண்ணில் அந்த தொகுதியில் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகாரளிக்கலாம்.

எழும்பூர் தொகுதிக்கு சேத்துப்பட்டு மேயர் ராமநாதன் சாலையில் உள்ள எழும்பூர் வட்டாட்சியர்அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலராக என். சுரேஷ் உள்ளார், 8925960716 என்ற எண்ணில் அந்த தொகுதியில் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகாரளிக்கலாம்.

ராயபுரம் தொகுதிக்கு பேசின் பிரிட்ஜ் சாலையில் உள்ள ராயபுரம் மண்டல அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும், தேர்தல் நடத்தும் அலுவலராக ஆர். பன்னீர்செல்வம் உள்ளார், 8925960717 என்ற எண்ணில் அந்த தொகுதியில் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகாரளிக்கலாம்.

துறைமுகம் தொகுதிக்கு பிராட்வே பிரகாசம் சாலையில் உள்ள பாரதி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தாக்கல் செய்ய வேண்டும், தேர்தல் நடத்தும் அலுவலராக டி. பரிதா பானு உள்ளார், 8925960718 என்ற எண்ணில் அந்த தொகுதியில் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகாரளிக்கலாம்.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதிக்கு திருவல்லிக்கேணி டாக்டர். பெசன்ட் சாலையில் உள்ள சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பல்நோக்கு மைய கட்டிடத்தில் தாக்கல் செய்ய வேண்டும், தேர்தல் நடத்தும் அலுவலராக ஆர். சுகந்தி உள்ளார், 8925960719 என்ற எண்ணில் அந்த தொகுதியில் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகாரளிக்கலாம்.

ஆயிரம் விளக்கு தொகுதிக்கு நுங்கம்பாக்கம் ஏரிப்பகுதி, 4-வது குறுக்குத் தெருவில் உள்ள தேனாம் பேட்டை மண்டல அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும், தேர்தல் நடத்தும் அலுவலராக ஐ. வளர்மதி உள்ளார்.

8925960720 என்ற எண்ணில் அந்த தொகுதியில் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகாரளிக்கலாம். அண்ணா நகர் தொகுதிக்கு ஷெனாய் நகர் புல்லா அவென்யூ, 2வது குறுக்குத் தெருவில் உள்ள அண்ணாநகர் மண்டல அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும், தேர்தல் நடத்தும் அலுவலராக பி.எம்.செந்தில் குமார் உள்ளார், 8925960721 என்ற எண்ணில் அந்த தொகுதியில் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகாரளிக்கலாம்.

விருகம்பாக்கம் தொகுதிக்கு சாலிகிராமம், காமராஜர் சாலையில் உள்ள விருகம்பாக்கம் 128 வார்டு அலுவ லகத்தில் தாக்கல் செய்ய வேண்டும், தேர்தல் நடத்தும் அலுவலராக என். சத்திய நாராயணன் உள்ளார், 8925960722 என்ற எண்ணில் அந்த தொகுதியில் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகாரளிக்கலாம்.

சைதாப்பேட்டை தொகுதிக்கு அண்ணாசாலை லிட்டில் மவுண்ட்டில் உள்ள கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும், தேர்தல் நடத்தும் அலுவலராக எஸ். வெங்கடேஷ் உள்ளார், 8925960723 என்ற எண்ணில் அந்த தொகுதியில் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகாரளிக்கலாம்.

தியாகராயர் நகர் தொகுதிக்கு கோடம்பாக்கம், என்.எஸ்.கே. சாலையில் உள்ள கோடம்பாக்கம் மண்டல அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும், தேர்தல் நடத்தும் அலுவலராக ஜி.சரவண மூர்த்தி உள்ளார், 8925960724 என்ற எண்ணில் அந்த தொகுதியில் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகாரளிக்கலாம்.

மயிலாப்பூர் தொகுதிக்கு ஆர்.ஏ.புரம், பசும்பொன் முத்துராமலிங்கம் சாலையில் மயிலாப்பூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும், தேர்தல் நடத்தும் அலுவலராக பி.எஸ்.விஜயலட்சுமி உள்ளார், 8925960725 என்ற எண்ணில் அந்த தொகுதியில் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகாரளிக்கலாம்.

வேளச்சேரி தொகுதிக்கு அடையாறு, டாக்டர் முத்துலட்சுமி சாலையில் உள்ள தெற்கு வட்டார துணை ஆணையர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலராக லட்சுமி பிரியா உள்ளார். 8925960726 என்ற எண்ணில் அந்த தொகுதியில் தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகாரளிக்கலாம்.

SCROLL FOR NEXT