கோப்புப் படம்

 
தமிழகம்

கூட்டுறவுச் சங்கங்களுக்கு விரைவில் தேர்தல்: 5 கட்டங்களாக நடத்த தமிழக அரசு திட்டம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் 2023-ம் ஆண்டு கூட்​டுறவுச் சங்​கங்​களின் தேர்​தல் நடத்​தப்​பட்​டிருக்க வேண்​டும். ஆனால், திமுக ஆட்​சி​யில் தேர்​தல் நடத்​தப்​பட​வில்​லை.

தவெக ஆட்​சிக்கு வந்​த​பின்பு கூட்​டுறவுச் சங்​கங்​களுக்கு தேர்​தல் நடத்​து​வதற்​கான பணி​கள் தீவிர​மாக முன்​னெடுக்​கப்​பட்​டன. அதன்​படி, கூட்​டுறவுச் சங்​கங்​களுக்கு 5 கட்​ட​மாக தேர்​தல் நடத்​து​வதற்கு தமிழக அரசு முடிவு செய்​துள்​ளது. இதற்​கான பட்​டியலை உடனடி​யாக சமர்ப்​பிக்க கூட்​டுறவுச் சங்​கங்​களின் பதி​வாள​ருக்கு உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக தமிழ்​நாடு மாநில கூட்​டுறவுச் சங்​கங்​களின் தேர்​தல் ஆணை​யர் தயானந்த் கட்​டாரி​யா, கூட்​டுறவுச் சங்​கங்​களின் பதி​வாள​ருக்கு அனுப்​பிய சுற்​றறிக்​கை​யில், “தமிழகத்​தில் கூட்​டுறவுச் சங்​கங்​களுக்​கான ஒட்​டுமொத்த தேர்​தல்​கள் 5 கட்​டங்​களாக நடை​பெற உள்​ளன.

அதன் அடிப்​படை​யில் முதல்​கட்​ட​மாக 38 மண்​டலங்​களில் தேர்​தல் நடத்​தப்பட வேண்​டிய சங்​கங்​களின் பட்​டியல்​கள் சரி​பார்க்​கப்​பட்​டன. இதில் மொத்​தம் 7,405 தொடக்​கக் கூட்​டுறவு சங்​கங்​களுக்கு முதல்​கட்​ட​மாக 4 கட்​டங்​களாக தேர்​தல் நடத்​தப்பட உள்​ளது. எனவே, தேர்​தல் நடத்​தப்பட வேண்​டிய கூட்​டுறவுச் சங்​கங்​களின் விவரங்​களை மாவட்ட வாரி​யாகப் பட்​டியலிட்​டு, ஆணை​யத்​துக்கு உடனே அனுப்பி வைக்க வேண்​டும்” என்று தெரிவிக்​கப்​பட்​டு ள்​ளது. இதன்​மூலம், விரை​வில் தேர்​தல் அறி​விப்பு வெளி​யாகும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

SCROLL FOR NEXT