தமிழகம்

முதல் தலைமுறை வாக்காளர்கள் வாக்களிப்பது எப்படி? - தேர்தல் ஆணையம் விளக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: ​முதல் தலைமுறை வாக்​காளர்​களுக்​காக வாக்​குச்​சாவடி​யில் வாக்​களிக்​கும் முறை தொடர்​பாக தேர்​தல் ஆணை​யம் வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பு: வாக்​குச்​சாவடி​யில் வாசலில் வேட்​பாளர்​களின் பெயர் பட்​டியல் ஒட்​டப்​பட்டு இருக்​கும். அதில், வாக்​களிக்க விரும்​பும் வேட்​பாளரின் பெயர், புகைப்​படம், சின்​னம் ஆகியவை இடம் பெற்​றிருக்​கும்.

அதில் யாருக்கு வாக்​களிக்​கப் போகி​றோம் என்​பதை உறுதி செய்த பிறகு முதலில் வாக்​குச்​சாவடி அலு​வலரிடம் (பிஓ-1) இடம் பெயர், வாக்​காளர் அடை​யாள அட்டை அல்​லது அடை​யாள ஆவணத்​தைக் காட்ட வேண்​டும்.

இதனையடுத்து உங்​கள் பெயர் பட்​டியலில் இருக்​கிற​தா? என்​பதை பிஓ-1 பார்த்​து​விட்​டு, உங்​கள் பெயரை சத்​த​மாக படிப்​பார். உடனே அங்​கிருக்​கும் வேட்​பாளர்​களின் முகவர்​கள் தங்​களிடம் உள்ள பட்​டியலில் உங்​களின் பெயர் உள்​ளதா என்​ப​தைச் சரி பார்ப்​பார்​கள்.

அடுத்து, பிஓ-2-வது அலு​வலரிடம் செல்ல வேண்​டும். அவர் 17ஏ என்ற பதிவேட்​டில் உங்​களின் கையெழுத்​தைப் பெறு​வார். பின்​னர் உங்​களின் இடது கை ஆள்​காட்டி விரலில் மை வைப்​பார். பின்​னர் வரிசை எண் கொண்ட சிலிப் ஒன்றை தரு​வார்.

அதைப் பெற்​றுக்​கொண்டு பிஓ-3 அலு​வலரிடம் செல்ல வேண்​டும். அவர் அந்த சிலிப்பை வாங்​கிக்​கொண்டு தன்​னிடம் இருக்​கும் கட்​டுப்​பாட்டு எந்​திரத்​தின் பட்​டனை அழுத்​து​வார். வாக்​குப்​ப​திவு செய்​வதற்​காக மறை​வாக அமைக்​கப்​பட்​டுள்ள இடத்​திற்​குச் செல்ல வேண்​டும்.

அங்கு நீங்​கள் விரும்​பும் வேட்​பாளரின் பெயருக்கு எதிரே இருக்​கும் நீல​வண்​ணப் பட்​டனை அழுத்தி தங்​களது வாக்​கு​களைப் பதிவு செய்ய வேண்​டும். அப்​போது நீண்ட பீப் சத்​தம் கேட்​கும். அப்​படி​யா​னால் உங்​கள் வாக்கு பதி​வாகி​விட்​டது என்று அர்த்​தம்.

உடனே அரு​கில் இருக்​கும் விவி​பாட் எந்​திரத்​தின் மானிட்​டரில் நீங்​கள் யாருக்கு வாக்​களித்​தீர்​களோ அவருக்​கான சின்​னம் போன்ற விவரம் அடங்​கிய சீட்டு தெரி​யும்.

7 நொடிகள் மட்​டுமே அதைப் பார்க்க முடி​யும். பின்​னர் அந்​தச் சீட்டு அந்த விவி​பாட் எந்​திரத்​திற்​குள்​ளேயே விழுந்​து​விடும். இந்த நடவடிக்​கை​கள் முடிந்​ததும், வெளியே வர வேண்​டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT