தமிழகம்

ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் பிப்.17-ல் இறுதி விசாரணை

செய்திப்பிரிவு

புதுடெல்லி: தமிழகத்​தில் கடந்த 2011 சட்​டப்​பேரவை தேர்​தலின்​போது, கொளத்​தூர் தொகு​தி​யில் திமுக சார்​பில் மு.க.ஸ்​டா​லின் போட்​டி​யிட்​டார். அவரை எதிர்த்து அதி​முக சார்​பில் சைதை துரை​சாமி போட்​டி​யிட்​டார்.

தேர்​தல் ஆணை​யம் நிர்​ண​யித்த தொகைக்கு அதி​க​மாக ஸ்டா​லின் செலவு செய்​ததுடன், அதி​கார துஷ்பிரயோகத்​தி​லும் ஈடு​பட்​ட​தால், அவரது வெற்றி செல்​லாது என அறிவிக்​கு​மாறு உச்ச நீதி​மன்​றத்​தில் சைதை துரைசாமி மேல்​முறை​யீடு செய்​தார்.

          

இந்த மனுவை நீதிப​தி​கள் ஜே.கே.மகேஸ்​வரி, விஜய் பிஷ்னோய் அமர்வு நேற்று மீண்​டும் விசா​ரித்​தது. சைதை துரை​சாமி சார்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் டி.எஸ்​.​நா​யுடு, ‘‘வாக்கு மையங் களில், உதயசூரியன் சின்​னம் அச்​சிட்ட பூத் சிலிப் விநி​யோகம் செய்தது தேர்​தல் முறை​கேடு” என்று வாதிட்​டார்.

அதற்கு வீடியோ ஆதாரம் உள்ளதா என்று கேட்ட நீதிப​திகள், குற்​றச்​சாட்​டு​களை நிரூபிக்க தவறி​னால் மேல்முறையீட்டு மனு தள்​ளு​படி செய்​யப்​படும் என்று கூறி வி​சா​ரணையை பிப்​.17-ம்​ தேதிக்கு தள்​ளிவைத்​தனர்​.

SCROLL FOR NEXT