மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணாவிடம் கொடி நாள் நிதியாக ரூ. 60 லட்சத்துக்கான சொத்துகளின் உயிலை வழங்கிய பி.சுப்பையா. படம்: நா.தங்கரத்தினம்

 
தமிழகம்

நாட்டை காக்கும் ராணுவ வீரர்களுக்கு உதவ கொடிநாள் நிதியாக ரூ.60 லட்சம் வழங்கிய முதியவர்

செய்திப்பிரிவு

மதுரை: மதுரை மாவட்ட ஆட்​சி​யர் அலு​வலக கூட்​டரங்​கில் மக்​கள் குறைதீர்க்​கும் நாள் கூட்​டம், ஆட்​சி​யர் நிஷாந்த் கிருஷ்ணா தலை​மை​யில் நடை​பெற்​றது.

திருப்​பரங்​குன்​றம் ஹார்​விபட்​டியைச் சேர்ந்த மதுரா கோட்ஸ் நிறு​வனத்​தில் பணிபுரிந்து ஓய்​வு​பெற்ற 82 வயது முதி​ய​வர் பி.சுப்​பை​யா. இவர் நேற்று மதுரைஆட்​சி​யரை சந்​தித்து கொடி நாள் நிதிக்கு ரூ.10,000-க்கான காசோலையை வழங்​கி​னார்.

மேலும் தனது வங்​கிக் கணக்​கில் உள்ள ரூ.30 லட்​சம் சேமிப்​பு, அதற்​குரிய வட்​டித்தொகை மற்​றும் தனது வங்​கிக்கணக்கு பெட்​டகத்​தி​லுள்ள ரூ.30 லட்​சம் மதிப்​புள்ள பொருட்​கள் ஆகிய​வற்​றை​யும் கொடி நாள் நிதிக்கு வழங்​கும் வகை​யில் உயில் ஆவணத்​தை​யும் வழங்​கி​னார். அப்​போது அரங்​கி​லிருந்தவர்கள் கைதட்டி பாராட்​டினர்.

இதுகுறித்து சுப்​பையா கூறியது: யாரும் இன்றி வாடகை வீட்​டில் வசிக்​கிறேன். நாட்டை காக்​கும் ராணுவ வீரர்​களுக்கு உதவ வேண்​டும் என்​பதற்காக கொடி​நாள் நிதி​யாக மொத்தம் ரூ. 60 லட்​சத்துக்கான உயி​லை வழங்​கினேன். ஒவ்​வொரு​வரும் கடைசி காலத்​தில் வரு​வா​யில் ஒரு சதவீதத்​தை​யா​வது ராணுவத்​துக்கு வழங்க வேண்​டும் என்​பதை சட்​ட​மாக இயற்ற வேண்​டும் என்​பதே எனது விருப்​பம். இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

SCROLL FOR NEXT