தமிழகம்

மதுராந்தகம் தொகுதியில் 8 வாக்குசாவடிகள் பதற்றமானவை

செய்திப்பிரிவு

மதுராந்தகம்: இடைத்தேர்தலுக்காக அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களில் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ள இடங்களில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் மு.வீரப்பன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

மதுராந்தகம் தொகுதியில் 167 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 285 வாக்கு செலுத்தும் மையங்கள் அமைக்கப்பட் டுள்ளன. இதில் படாளம், மேலவலம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள 8 வாக்குச்சாவடி மையங்கள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளன.

இங்கு, மாவட்ட ஆட்சியர் மு.வீரப்பன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இங்கு தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

SCROLL FOR NEXT