தமிழகம்

சென்னை எழும்பூரில் இருந்து 9 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம்

ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணி

மு.வேல்சங்கர்

சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் நடந்து வரும் மறுசீரமைப்பு பணி காரணமாக, உழவன் விரைவு ரயில் உள்ளிட்ட 9 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: எழும்பூர் ரயில் நிலையத்தில் நடந்து வரும் மறுசீரமைப்பு பணிகள் நடந்து வருவதால், சில விரைவு ரயில்களின் சேவையில் ஆக.5-ம் தேதி முதல் ஆக.20-ம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்விவரம்:

ஒரு பகுதி ரத்து

தஞ்சாவூர் - எழும்பூர், கர்நாடகா மாநிலம் மங்களூர் - எழும்பூர், கொல்லம் - எழும்பூர், சேலம் - எழும்பூர் ஆகிய விரைவு ரயில்கள் தாம்பரம் ரயில் நிலையம் வரையிலும், திருச்சி - எழும்பூர் ராக்போர்ட் ரயில் மாம்பலம் ரயில் நிலையம் வரையிலும் ஆக.5-ம் தேதி முதல் ஆக.19-ம் தேதி வரை இயக்கப்படும்.

புறப்படும் இடம் மாற்றம்

எழும்பூர் - தஞ்சாவூர் உழவன் விரைவு ரயில், எழும்பூர் - மங்களூரு விரைவு ரயில், எழும்பூர்- கேரள மாநிலம் கொல்லம் அனந்தபுரி, எழும்பூர் - திருச்சி ராக்போர்ட் விரைவு ரயில் ஆக.6 முதல் ஆக.20-ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும்.

மாற்றுப்பாதையில் இயக்கம்

குஜராத் மாநிலம் அகமதாபாத் காலை 9:30 மணி ரயில், ஆக.6, 13-ம் தேதிகளில் திருத்தணி, செங்கல்பட்டு என மாற்றுபாதையில் இயக்குவதால், அரக்கோணம், பெரம்பூர், எழும்பூர் வழியாக செல்லாது.

திருச்சி - ஆமதாபாத் காலை 5:45 மணி ரயில், ஆக. 9, 16-ம் தேதிகளில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருத்தணி வழியாக செல்வதால், எழும்பூர், பெரம்பூர் வழியாக செல்லாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT