தமிழகம்

எழும்பூர் ரயில் நிலையத்தின் மறுசீரமைப்பு பணி: 5 விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் நீட்டிப்பு

சில மின்சார ரயில்கள் சேவை ரத்து

செய்திப்பிரிவு

சென்னை: எழும்பூர் ரயில் நிலை​யத்​தின் மறுசீரமைப்பு பணி​யால், 5 விரைவு ரயில்​களின் சேவை​யில் மாற்​றம் நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. ஆக.25 முதல் செப்​.7-ம் தேதி வரை சில மின்​சார ரயில்​களின் சேவை​கள் ரத்து செய்​யப்​பட​வுள்​ளன.

சென்னை எழும்​பூர் ரயில் நிலை​யத்​தில் மறுசீரமைப்பு பணி​கள், சுமார் ரூ.842 கோடி மதிப்​பில், பல கட்​டங்​களாக நடை​பெறுகின்​றன. இதன் 2-ம் கட்​ட​மாக, புதிய நடைமேடை அமைக்​கும் பணி​கள் கடந்த ஜூலை முதல் இரண்டு பிரிவு​களாக நடை​பெறுகின்​றன.

முதல் பிரி​வில் 1 முதல் 5-வது நடைமேடை வரை​யிலும், 2-ம் பிரி​வில் 6-வது முதல் 11-வது நடைமேடை வரை​யிலும் கட்​டு​மானப் பணி​கள் மேற்​கொள்​ளப்​படு​கின்​றன.

குறிப்​பாக, 6-வது நடைமேடை முதல் 11-வது நடைமேடை பகு​தி​களில், கட்​டு​மானப் பணி​களை மேற்​கொள்​வதற்​காக நிலை​யத்​தின் நடுப்​பகு​தி​யில் 500 மெட்​ரிக் டன் திறன் கொண்ட கிரேன் நிலைநிறுத்​தப்​பட்​டுள்​ளது.

மேலும், 6-வது மற்​றும் 8-வது நடைமேடைகளுக்கு இடைப்​பட்ட பகு​தி​யில் கர்​டர் மற்​றும் தூண் அமைக்​கும் பணி​கள் நடை​பெறுகின்​றன. கட்​டு​மானப் பணி​களில் ஏற்​பட்ட தாமதத்​தால், பணிக்​காலம் மேலும் 5 நாட்​களுக்கு நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. மேலும், ரயில்​களின் வருகை மற்​றும் புறப்​பாட்​டில் சில மாற்​றங்​கள் செய்​யப்​பட்​டுள்​ளன. அதன்​படி, 5 விரைவு ரயில்​கள் சேவை மாற்​றப்​பட்​டுள்​ளன.

ஆக.20 முதல் ஆக.24-ம் தேதிவரை, தஞ்​சாவூர் - சென்னை எழும்​பூருக்கு புறப்​படும் உழவன் விரைவு ரயில், மங்​களூரு சென்ட்​ரல் - சென்னை எழும்​பூருக்கு புறப்​படும் விரைவு ரயில், கொல்​லம் - சென்னை எழும்​பூருக்கு புறப்​படும் அனந்​த​புரி விரைவு ரயில், சேலம் - சென்னை எழும்​பூருக்கு புறப்​படும் விரைவு ரயில் ஆகிய 4 ரயில்​கள் தாம்​பரத்​தில் நிறுத்​தப்​படும்.

இந்த ரயில்​கள் தாம்​பரம் - எழும்​பூர் வரை இயக்​கப்​ப​டாது. திருச்​சி​ராப்​பள்ளி - எழும்​பூருக்கு ஆக.20 முதல் ஆக.24-ம் தேதி வரை புறப்​படும் மலைக்​கோட்டை விரைவு ரயில், மாம்​பலம் ரயில் நிலை​யத்​தில் நிறுத்​தப்​படும்.

ஆக.21 முதல் ஆக.25-ம் தேதி வரை எழும்​பூரில் இருந்து தஞ்​சாவூர், கொல்​லம், திருச்​சிக்கு முறையே புறப்பட வேண்​டிய உழவன், கொல்​லம், மலைக்​கோட்டை விரைவு ரயில்​கள் தாம்​பரத்​தில் இருந்து வெவ்​வேறு நேரங்​களில் புறப்​படும்.

இது​போல மேற்​படி​நாட்​களில், எழும்​பூர் - மங்​களூரு சென்ட்​ரலுக்கு புறப்​பட​வேண்​டிய ரயில் தாம்​பரத்​தில் இருந்து புறப்​படும்.

இது குறித்​து, தெற்கு ரயில் வே அதி​காரி​கள் கூறிய​தாவது: ஏற்​கெனவே ஆக.20-ம் தேதி வரை அறிவிக்​கப்​பட்​டிருந்த ரயில் சேவை மாற்​றங்​கள் தற்​போது ஆக.25-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளன. ஆக.26-ம் தேதி முதல் ரயில் சேவை​கள் பழைய நடை​முறைக்கு திரும்​பும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

மேலும், புறநகர் ரயில்​களின் சேவை​கள் ஆக.25 முதல் செப்​. 7-ம் தேதி வரை இரவு 11.15 மணி முதல் அதி​காலை 4.15 மணி வரை ரத்து செய்​யப்​படு​கின்​றன. பயணி​கள் தங்​களது பயணத்​துக்கு முன் மாற்​றப்​பட்ட ரயில் நேரங்​கள் மற்​றும் சேவை விவரங்​களை சரி​பார்த்​து, அதற்​கேற்​ப தங்​களது பயணத்​தை திட்​ட​மிட வேண்​டும்​. இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.

SCROLL FOR NEXT