தமிழகம்

முட்டை கொள்முதல் விலையை ரூ.7 ஆக உயர்த்த முடிவு

செய்திப்பிரிவு

நாமக்கல்: கோழித் தீவனம், போக்​கு​வரத்து செலவு உயர்​வால் ஒரு முட்​டை​யின் கொள்​முதல் விலையை ரூ.7 ஆக உயர்த்த முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது என தமிழ்​நாடு கோழிப் பண்​ணை​யாளர்​கள் சங்​கத் தலை​வர் தெரி​வித்​துள்​ளார்.

நாமக்​கல்​லில் நடந்த சங்​கத்​தின் பொதுக்​குழு கூட்​டத்தில் அதன் தலைவர் சிங்​க​ராஜ் பேசி​ய​தாவது: தமிழகத்​தில் கோழிப்​பண்​ணைத் தொழிலுக்கு ஏற்பட்டுள்ள ஆட்​கள் பற்​றாக்​குறையைச் சமாளிக்க 100 நாள் வேலைத்திட்​டப் பணி​யாளர்​களை ஈடு​படுத்த அனுமதிக்க வேண்டும். தற்​போது, டீசல், தீவனத்​தின் விலை உயர்ந்​துள்​ள​தால், முட்டை உற்​பத்தி செலவு அதி​கரித்து வரு​கிறது.

எனவே, ஒரு முட்​டை​யின் கொள்​முதல் விலையை ரூ.7 வரை உயர்த்த முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது. தற்​போது, வளை​குடா நாடு​களில் போர் பதற்​றம் நில​வுவ​தால் தினசரி 25 லட்​சம் முட்​டைகள் மட்​டுமே ஏற்​றுமதியாகிறது. இவ்வாறு பேசினார்.

SCROLL FOR NEXT