இபிஎஸ்

 
தமிழகம்

“திமுகவுக்கு இதுதான் கடைசி தேர்தல்” - இபிஎஸ் திட்டவட்டம்

தமிழினி

சென்னை: “எல்லா தரப்பு மக்களும் போராட்டத்தில் இறங்கிவிட்டார்கள். திமுகவுக்கு இதுதான் கடைசி தேர்தல்" என அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழகத்தில் இனி எப்போதும் திமுக ஆட்சிக்கு வராது. இந்த தேர்தல்தான் திமுகவுக்கு கடைசி தேர்தல்.

          

2021 தேர்தல் வாக்குறுதிகளில் நான்கில் ஒரு பங்கைகூட திமுக நிறைவேற்றவில்லை. அரசு ஊழியர்கள், செவிலியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள், மருத்துவர்கள், சத்துணர்வு ஊழியர்கள் என அனைவரும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தமிழகம் போராட்டக் களமாக இருக்கிறது. எல்லா தரப்பு மக்களும் போராட்டத்தில் இறங்கிவிட்டார்கள். அந்த அளவுக்கு மக்களின் வெறுப்பை திமுக சம்பாதித்து வைத்திருக்கிறது. மக்கள் திமுகவுக்கு விடைகொடுத்து விடுவார்கள்”. இவ்வாறு இபிஎஸ் கூறினார்.

SCROLL FOR NEXT