எடப்பாடி பழனிசாமி | கோப்புப் படம்

 
தமிழகம்

மாட்டு வண்டியில் வந்து தேர்தல் பொங்கல் கொண்டாடத் தயாராகிறார் பழனிசாமி

த.சக்திவேல்

அ​தி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி முதல்​வ​ராக இருந்த போது, சொந்த ஊரில் பொங்​கல் பண்​டிகை கொண்​டாடி வந்​தார். பின்​னர், ஒவ்​வொரு ஆண்​டும் சேலம் மாவட்​டத்​தின் ஒரு தொகு​தியை தேர்ந்​தெடுத்து மக்​களு​டன் பொங்​கல் பண்​டிகை கொண்​டாடி வரு​கி​றார்.

பொங்​கல் பண்​டிகைக்கு இன்​னும் ஒரு மாதம் மட்​டுமே உள்ள நிலை​யில், மேட்​டூர் தொகு​தி​யில் கிராம மக்​களு​டன் பண்​டிகையை கொண்​டாட உள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

இன்​னும் சில மாதங்​களில் சட்​டப்​பேரவை தேர்​தல் நடை​பெறவுள்ள நிலை​யில் பழனி​சாமி கலந்து கொள்​ளும் பொங்​கல் விழாவை முக்​கி​யத்​து​வம் பெறும் வகை​யில் கொண்​டாட சேலம் மாவட்ட அதி​முக​வினர் தீவிரம் காட்டி வரு​கின்​ற​னர்.

அதன்​படி அதி​முக பொதுச்​ செய​லா​ளர் பழனி​சாமி மேட்​டூர் தொகு​தி​யில் பொங்​கல் பண்​டிகையை கொண்​டாடும் வகை​யில் கொளத்தூர், மேச்​சேரி ஆகிய பகு​தி​களில் உள்ள கிரா​மங்​களில் புறநகர் மாவட்ட செய​லா​ளர் இளங்​கோவன் தலை​மையி​லான மேட்​டூர் தொகுதி நிர்​வாகி​கள் கிரா​மத்தை தேர்வு செய்​யும் பணி​யில் நேற்று ஈடு​பட்​டனர்.

தொடர்ந்​து, கோனூர் பகு​தி​யில் உள்ள மாரி​யம்​மன் கோயில் திடலில் பிரம்​மாண்​ட​மாக 108 பானை​களில் பொங்​கல் வைத்து கொண்​டாட முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

பழனி​சாமியை மாட்டு வண்​டி​யில் ஊர்​வல​மாக அழைத்து வரவும், கலை நிகழ்ச்​சிகள், ஒயி​லாட்​டம், பொம்​மலாட்​டம் உள்​ளிட்ட ஏற்​பாடு​கள் செய்ய வேண்​டும் எனவும் நிர்​வாகி​களுக்கு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது.

தொடர்ந்​து, கொளத்​தூரில் தொகுதி நிர்​வாகி​களு​டன் நடந்த ஆலோ​சனை கூட்​டத்​தில் பண்​டிகையை சிறப்​பாக கொண்​டாட வேண்​டும் எனவும், நிர்​வாகிகளுக்கு சில அறி​வுரைகளும், ஆலோ​சனை​களும் வழங்​கப்​பட்​டன. மேட்​டூர் தொகுதி நிர்​வாகி​கள் அதற்​கான ஏற்​பாடு​களை உடனடி​யாக தொடங்கி உள்​ளனர்.

SCROLL FOR NEXT