தமிழகம்

சட்ட விரோத பணப் பரிமாற்ற புகார்: 2 தொழிலதிபர்களின் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை

செய்திப்பிரிவு

சென்னை: சட்ட விரோத பணப் பரி​மாற்​றம், சந்​தேகத்​துக்​குரிய நிதி பரிவர்த்​தனை​கள் தொடர்​பாக சென்​னை​யில் 2 தொழிலதிபர்களின் வீடு​களில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் சோதனை நடத்​தினர்.

சென்னை வண்​ணாரப்​பேட்டை சீனி​வாசபுரம் பகு​தி​யைச் சேர்ந்த தொழில​திபர் ஒரு​வர் தனி​யார் மார்க்​கெட்​டிங் நிறு​வனம் நடத்தி வரு​கிறார். அவரது வீட்​டுக்கு அமலாக்​கத் துறை அதி​காரி​கள் நேற்று காலை வந்​து, சோதனை மேற்​கொண்​டனர்.

அதே​போல, ராயப்​பேட்டை பீட்​டர்ஸ் சாலை பகு​தி​யில் டிராவல்ஸ் நிறு​வனம் நடத்தி வருபவரின் வீட்​டிலும் அதே நேரத்​தில் அதி​காரி​கள் சோதனை நடத்​தினர். 2 இடங்​களி​லும் துணை ராணுவப் படை​யினர் பாது​காப்பு பணி​யில் ஈடு​படுத்​தப்​பட்​டிருந்​த​தால், பரபரப்​பான நிலை காணப்​பட்​டது.

இந்த சோதனை பல மணி நேரம் நீடித்​தது. இதில் வங்கி பரிவர்த்​தனை ஆவணங்​கள், சொத்து தொடர்​பான பத்​திரங்​கள், கணினி ஹார்டு டிஸ்க், செல்​போன் உள்​ளிட்ட மின்​னணு சாதனங்​களை அதி​காரி​கள் ஆய்வு செய்​த​தாக கூறப்​படு​கிறது.

கைப்​பற்​றப்​பட்ட ஆவணங்​கள் அனைத்​தும் தடய​வியல் மற்​றும் நிதி ஆய்​வுக்கு உட்​படுத்​தப்பட உள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. ‘சட்ட விரோத பணப் பரி​மாற்​றம் மற்​றும் சந்​தேகத்​துக்​குரிய நிதி பரிவர்த்​தனை​கள் தொடர்​பாக கிடைத்த தகவல்​களின் அடிப்​படை​யில் இந்த சோதனை நடத்​தப்​பட்​டுள்​ளது.

எனினும், விசா​ரணை தொடர்ந்து நடை​பெற்று வரு​வ​தால் வழக்​கின் முழு விவரங்​களை​யும் தற்​போது வெளி​யிட முடி​யாது. சோதனை முடிவு​களின் அடிப்​படை​யில் அடுத்​தகட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும்’ என்று அதி​காரி​கள்​ கூறினர்​.

SCROLL FOR NEXT