தமிழகம்

அலுமினிய மின் கடத்தி கொள்முதல் முறைகேடு வழக்கு: தமிழகம் முழுவதும் 60 இடங்களில் சோதனை

லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் நடவடிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: அலுமினிய மின் கடத்​தி​கள் கொள்​முதல் செய்​த​தில் நடந்த முறை​கேடு தொடர்​பாக, 60 இடங்​களில் நேற்று லஞ்ச ஒழிப்​புத் துறை போலீ​ஸார் திடீர் சோதனை நடத்​தினர். அப்​போது பல ஆவணங்​கள், ஆதா​ரங்​கள் கைப்​பற்​றியதாகத் தகவல் வெளி​யாகி உள்​ளது.

கடந்த திமுக ஆட்சி காலத்​தில் 2021 முதல் 2023 வரை மின்​சா​ரத் துறை அமைச்​ச​ராகச் செந்​தில் பாலாஜி பதவி வகித்​தார். அந்​தக் கால கட்​டத்​தில் தமிழ்​நாடு மின் பகிர்​மான கழகம் லிமிடெட் நிறு​வனத்​துக்கு அலுமினிய மின் கடத்​தி​கள் கொள்​முதல் செய்​த​தில் கோடிக்​கணக்​கான பணம் மோசடி நடை​பெற்​ற​தாகக் குற்​றச்​சாட்டு எழுந்​தது. இதுதொடர்​பாக தமிழக மின் வாரி​யத்​தின் மேலாண்மை இயக்​குநர், லஞ்ச ஒழிப்​புத் துறை​யில் புகார் அளித்​தார். அதன்​படி, லஞ்ச ஒழிப்​புத் துறை போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர்.

இதையடுத்​து, கடந்த ஜூன் 30-ம் தேதி அடை​யாளம் தெரி​யாத அலு​வலர்​கள், பிற அடை​யாளம் தெரி​யாத அரசு ஊழியர்​கள் மற்​றும் தனி நபர்​கள் / ஒப்​பந்​த​தா​ரர்​களுக்கு எதி​ராக வழக்​குப் பதிவு செய்​யப்​பட்டு விசா​ரணை மேற்​கொள்​ளப்​பட்​டது. விசா​ரணை​யில் அரசு ஊழியர்​கள் மற்​றும் தனி​யார் ஒப்​பந்​த​தா​ரர் ஆகி​யோர் விநி​யோகஸ்​தர்​களு​டன் கூட்டு சேர்ந்து தங்​களது அதி​காரப்​பூர்வ பதவியைத் தவறாகப் பயன்​படுத்தி குற்​றச்​செயல்​களில் ஈடு​பட்​டது உறுதி செய்​யப்​பட்​டது.

இந்த முறை​கேடு மூலம் அரசு கரு​வூலத்​துக்​குக் கோடிக்​கணக்​கான பணம் இழப்பு ஏற்​பட்​டது கண்​டறியப்​பட்​டது. மேலும் 2021 முதல் 2023 வரையி​லான கால கட்​டத்​தில், 2,07,495 கிலோ மீட்​டர் அலுமினிய மின் கடத்​தி​களைக் கொள்​முதல் செய்​வ​தி​லும் முறை​கேடு​கள் நடை​பெற்​றது தெரிய வந்​தது. இந்த விவ​காரம் தொடர்​பாக லஞ்ச ஒழிப்​புத் துறை போலீ​ஸார் தொடர்ந்து விசா​ரித்து வந்​தனர்.

இதன் தொடர்ச்​சி​யாக, முறை​கேட்​டில் தொடர்​புடைய​தாகக் கூறப்​படும் மின் வாரிய அதி​காரி​கள், முக்​கிய நபர்​கள் மற்​றும் ஒப்​பந்​த​தா​ரர்​களின் வீடு​கள், அலு​வல​கங்​கள் உள்​ளிட்ட இடங்​களில் நேற்று காலை முதல் லஞ்ச ஒழிப்​புத் துறை போலீ​ஸார் சோதனை நடத்​தினர்.

சென்னை உள்​ளிட்ட தமி​ழ​கத்​தின் பல்​வேறு பகு​தி​களில், 60 இடங்​களில் உள்ள தமிழ்​நாடு மின் பகிர்​மான கழக ஊழியர்​கள், பிற அரசு ஊழியர்​கள், தனி நபர்​கள், அலுமினிய மின் கடத்தி உற்​பத்தி நிறு​வனங்​கள் மற்​றும் ஒப்​பந்​த​புள்​ளி​தா​ரர்​களின் அலு​வல​கங்​களில் சோதனை நடத்​தப்​பட்​டது.

சென்​னை​யில் மட்​டும் 5 இடங்​களில் சோதனை நடை​பெற்​றது. தேனாம்​பேட்டை வெங்​கடரத்​தினம் தெரு​வில் உள்ள காசி​ராஜன் (எ) காசி​யின் வீட்​டிலும் லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் சோதனை நடத்​தினர். இவர், செந்​தில் பாலாஜி மின்​சா​ரத் துறை அமைச்​ச​ராக இருந்த போது அவரிடம் உதவி​யாள​ராகப் பணி​யாற்​றிய​தாக​வும், மின் வாரிய தலைமை நிதிக் கட்​டுப்​பாட்​டாள​ராகப் பணி​யாற்​றிய​தாக​வும் கூறப்​படு​கிறது.

இவரது வீட்​டில் ஏற்​கெனவே 2 ஆண்​டு​களுக்கு முன்பு வரு​மான வரித் துறை அதி​காரி​கள் சோதனை நடத்​தி​யிருந்த நிலை​யில், தற்​போது லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் சோதனை நடத்​தி​யுள்​ளனர். மேலும், பெருங்​குடி சிப்​காட் வளாகத்​தில் செயல்​பட்டு வரும் 4 தனி​யார் நிறு​வனங்​களி​லும் போலீ​ஸார் சோதனை மேற்​கொண்​டனர்.

மதுரை​யில்​...

ஓய்வு பெற்ற சென்னை மண்டல மின் வாரிய மெட்​டீரியல் பிரிவு இயக்​குனர் பாஸ்​கரனுக்​குச் சொந்​த​மான மதுரை கருப்​பாயூரணி, வில்​லாபுரம் வீடு​களி​லும் லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் சோதனை நடத்​தினர். சேலம் மாவட்​டம் மேட்​டூர் அருகே சிட்​கோ, குஞ்​சாண்​டியூர், கோனூர் பகு​தி​களில் செயல்​பட்டு வரும் 3 தனி​யார் நிறு​வனங்​களி​லும் சோதனை நடை​பெற்​றது. இந்த நிறு​வனங்​கள் கடந்த ஆட்​சிக் காலத்​தில் மின்​வாரி​யத்​துக்கு மின் கடத்தி பொருட்​களை வழங்​கிய​தாக கூறப்​படு​கிறது. ஆய்​வாளர்​கள் நரேந்​திரன், நல்​லம்​மாள், ரவிக்​கு​மார் ஆகி​யோர் தலை​மை​யில் 15-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் காலை 8 மணி முதல் சோதனை​யில் ஈடு​பட்​டனர்.

விழுப்​புரம் மாவட்​டம் கண்​டாச்​சிபுரம் அருகே சித்​தாத்​தூர் கிரா​மத்​தில் மின்​மாற்​றிகளுக்​குப் பயன்​படுத்​தப்​படும் மின் கம்​பிகளைத் தயா​ரிக்​கும் நிறு​வனத்​தி​லும் சோதனை நடை​பெற்​றது. காஞ்​சிபுரம் லஞ்ச ஒழிப்​புத் துறை டிஎஸ்பி கலைச்​செல்​வம் தலை​மையி​லான போலீ​ஸார் காலை 7 மணி முதல் மதி​யம் 1.30 மணி வரை சோதனை நடத்​தினர். அப்​போது முக்​கிய ஆவணங்​கள் மற்​றும் கணினி​யில் பதி​வாகி​யிருந்த தரவு​கள் கைப்​பற்​றப்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது.

திருப்​பூர்​...

திருப்​பூர் மாநக​ராட்​சிக்கு உட்​பட்ட கல்​லூரி சாலை, ராம்ஜி நகர் பகு​தி​யில் உள்ள தனி​யார் நிறு​வனத்​தி​லும் சோதனை நடை​பெற்​றது. ஆய்​வாளர் சசிலேகா தலை​மை​யில் திருப்​பூர் மற்​றும் ஈரோடு லஞ்ச ஒழிப்​புத் துறை போலீ​ஸார் சோதனை​யில் ஈடு​பட்​டனர். இந்த சோதனை​யில் 12 முக்​கிய ஆவணங்​கள் கைப்​பற்​றப்​பட்​ட​தாகக் கூறப்​படு​கிறது. நிறுவன உரிமை​யாளர் கிருஷ்ண​சாமி (84), திருப்​பூர் மின் வாரி​யத்​தில் உதவி செயற்​பொறி​யாள​ராகப் பணி​யாற்றி கடந்த 2000-ம் ஆண்டு ஓய்வு பெற்​றவர் என்​றும், பின்​னர் முகவரியை மாற்றி மின் வாரிய ஒப்​பந்த கொள்​முதலில் ஈடு​பட்​ட​தாக​வும் போலீ​ஸார் தெரி​வித்​துள்​ளனர்.

சிக்​கிய ஆவணங்​கள்

தனி​யார் நிறு​வனங்​களுக்​குச் சாதக​மாக விதி​களை மீறி டெண்​டர் வழங்​கப்​பட்​டதன் மூலம் அரசுக்கு ஏற்​பட்​ட​தாக கூறப்​படும் நிதி இழப்பு தொடர்​பான ஆதா​ரங்​களைத் திரட்​டும் வகை​யில் இந்த சோதனை​கள் நடத்​தப்​பட்​ட​தாக லஞ்ச ஒழிப்​புத் துறை தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

சோதனை​களின் போது கொள்​முதல் முறை​கேடு தொடர்​பான ஒப்​பந்த கோப்​பு​கள், நிதி பரி​வர்த்​தனை ஆவணங்​கள், முக்​கிய ஆவணங்​கள் மற்​றும் கணினித் தரவு​கள் கைப்​பற்​றப்​பட்​ட​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது. கைப்​பற்​றப்​பட்​ட ஆவணங்​களின்​ அடிப்​படை​யில்​ அடுத்​தகட்​ட வி​சா​ரணை நடைபெறும்​ என எதிர்​பார்​க்​கப்​படுகிறது.

SCROLL FOR NEXT