துரைமுருகன்

 

படம்: வி.எம்.மணிநாதன்

தமிழகம்

மணல் குவாரி முறைகேடு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தொடங்கியது: துரைமுருகனுக்கு விரைவில் சம்மன்

செய்திப்பிரிவு

சென்னை: ரூ.4,730 கோடி மணல் குவாரி முறைகேடு புகாரில் முன்​னாள் அமைச்​சர் துரைமுருக​னுக்கு விரைவில் சம்​மன் அனுப்பி விசா​ரணை நடத்த லஞ்ச ஒழிப்​புத்​துறை முடிவு செய்​துள்​ளது.

கடந்த திமுக ஆட்​சி​யில் அரசு மணல் குவாரி​களில் வெளிப்​படை​யான ஒப்​பந்​தப்​புள்ளி நடைமுறைகளைப் பின்​பற்​றாமல் குறிப்​பிட்ட நிறு​வனங்​களுக்கு ஒப்​பந்​தங்​கள் வழங்​கியது, அனுமதிக்​கப்​பட்ட அளவைவிட அதி​க​மாக மணல் அள்​ளியது, போலி அனுமதிச் சீட்​டுகள் மூலம் மணல் கடத்​தப்​பட்​டது உள்​ளிட்ட முறைகேடுகள் நடந்​த​தாக அமலாக்​கத் துறை குற்​றம்​சாட்​டி​யிருந்​தது. இத​னால் அரசுக்கு சுமார் ரூ.4,730 கோடி வரு​வாய் இழப்பு ஏற்​பட்​ட​தாகவும் தெரி​விக்​கப்​பட்​டது.

இது​தொடர்​பாக ட்​ரோன், செயற்​கைக்​கோள் படங்​கள், ஜியோ ஸ்கேனிங் மற்​றும் பொக்​லைன் இயந்​திரங்​களின் ஜிபிஎஸ் தரவு​கள் மூலம் அமலாக்​கத்​துறை ஆய்வு மேற்​கொண்​டது. மேலும், வழக்​குப்​ப​திவு செய்ய வலியுறுத்தி தமிழக டிஜி​பிக்கு கடிதமும் அனுப்​பி​யிருந்​தது. இந்​நிலை​யில், ஆட்சி மாற்​றத்​துக்​குப் பிறகு இந்த விவகாரம் மீண்​டும் விசா​ரணைக்கு எடுத்​துக்​கொள்​ளப்​பட்​டது.

முறைகேடுகள் நடை​பெற்​றதற்​கான முகாந்​திரம் இருப்​ப​தாகக் கருதிய லஞ்ச ஒழிப்​புத்​துறை, முன்​னாள் அமைச்​சர் துரைமுருகன், ஓய்வு​பெற்ற தலை​மைப் பொறி​யாளர்​கள் ஏ.முத்​தையா, ராமமூர்த்தி உள்​ளிட்ட அரசு அதி​காரி​கள், தனியார் நபர்​கள் மற்​றும் நிறு​வனங்​கள் தொடர்​பாக வழக்​குப்​ப​திவு செய்​துள்​ளது.

இதன் தொடர்ச்​சி​யாக, சென்னை, புதுக்​கோட்டை, திருச்சி, கரூர், வேலூர், மதுரை, திண்​டுக்​கல், கோவை உள்​ளிட்ட பகுதி​களில் நீர்​வளத்​துறை பொறி​யாளர்​கள், ஒப்​பந்​ததா​ரர்​கள் தொடர்​புடைய 34 இடங்​களில் லஞ்ச ஒழிப்​புத்​துறை போலீ​ஸார் நேற்று முன்​தினம் சோதனை நடத்​தினர்.

இதில் கைப்​பற்​றப்​பட்ட முக்​கிய ஆவணங்​களை அதி​காரி​கள் ஆய்வு செய்​து​வரும் நிலை​யில், இந்த வழக்​கில் அடுத்​தகட்​ட​மாக முன்​னாள் அமைச்​சர் துரைமுருக​னுக்கு சம்​மன் அனுப்பி வரவழைத்து, விசா​ரணை நடத்த லஞ்ச ஒழிப்​புத்​துறை​யினர் திட்​ட​மிட்​டுள்​ள​தாகத் தகவல் வெளியாகி​யுள்​ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT