படம்: வி.எம்.மணிநாதன்.

 
தமிழகம்

‘காவிரி​யில் ஒரு பக்கெட் நீரைக்கூட கர்நாடக அரசு நிறுத்த முடியாது’ - துரைமுருகன் கருத்து

செய்திப்பிரிவு

வேலூர்: தமிழகத்​தின் ஒப்​புதலின்றி காவி​ரி​யில் ஒரு பக்​கெட் தண்​ணீரைக்​கூட கர்​நாடக அரசால் நிறுத்த முடி​யாது என திமுக பொதுச்​செய​லா​ள​ரும் முன்​னாள் நீர்​வளத்​துறை அமைச்​சரு​மான துரைமுருகன் தெரி​வித்​தார்.

வேலூர் மாவட்​டம் காட்​பாடி​யில் உள்ள தனது இல்​லத்​தில் செய்​தி​யாளர்​களிடம் நேற்று அவர் கூறிய​தாவது: கர்​நாடக முதல்​வர் சிவக்​குமார், அவர் அமைச்​சரானதில் இருந்தே மேகேதாட்டு அணை விவகாரத்தை பேசி வரு​கிறார். இரு மாநிலங்​களுக்​குள் பாயும் ஆறுகளில் எக்​காரணத்​தைக் கொண்​டும் எந்த ஒரு மாநிலமும் தன்​னிச்​சையாக அணை​யைக் கட்​டுவது, நீரைத் தேக்கி வைப்​பது என்​பது முடி​யாத காரியம். எங்​கெல்​லாம் இரு மாநிலங்​களுக்கு இடை​யில் ஆறு ஓடு​கிறதோ அங்​கெல்​லாம் பிரச்​சினைதான்.

முல்​லைப் பெரியாறு, கிருஷ்ணா உள்​ளிட்ட ஆறுகளி​லும் பிரச்​சினை இருக்​கிறது. முல்​லைப் பெரியாறு அணை​யைப் பலப்​படுத்​து​வது, கூடுதல் அணை கட்​டுவது குறித்து கேரள மாநிலத்​தால் முடிவெடுக்க முடி​யாது. அது நம்​மைச் சார்ந்த ஒரு பிரச்​சினை. அதே போன்​றுதான் காவி​ரியும். காவி​ரி​யில் நாங்​கள் அணை கட்​டுவோம் என்று அவர்​கள் கூறு​வதே அபத்​தம். அதற்கு வாய்ப்​பிருந்​தால் இந்​நேரம் கட்​டி​யிருப்​பார்​கள். ஆனால், அதற்கு வாய்ப்பே இல்லை.

தமிழகத்​தின் ஒப்​புதலின்றி காவி​ரி​யில் ஒரு பக்​கெட் தண்​ணீரைக்​கூட கர்​நாடக அரசால் நிறுத்த முடி​யாது. எப்​படி​யாவது ஒப்​புதல் வாங்க வேண்​டும் என்​றுதான் அவர்​களும் நினைக்​கிறார்​கள். நீதிபதி சொன்​னால்​கூட அணை​யைக் கட்ட முடி​யாது.

ஏற்​கெனவே, ஒரு​முறை நம்​மைக் கேட்​காமல் மத்​திய அரசு அனுமதி கொடுத்​த​தாகக் கூறி வனத்​துறைக்கு ஒரு பைல் அனுப்​பினார்​கள். அவர்​கள் அனுமதி கொடுக்க முடி​யாது என திருப்பி அனுப்பி விட்​டார்​கள். தடைக்​கற்​களைத் தாண்​டுவது என்​பது சுலபம் அல்ல. கர்​நாடக முதல்​வர் ஆர்​வத்​தின் காரண​மாகச் சொல்​கிறாரே தவிர, அதை ஆக்​கப்​பூர்​வ​மாக எடுத்​துக் கொள்​ளக்​கூடாது.

இவ்​வாறு அவர் தெரி​வித்​தார். தமிழக சட்​டம்-ஒழுங்கு நில​வரம் குறித்து ஆளுநரிடம் மத்​திய உள்​துறை அமைச்​சர் அறிக்கை கேட்​டுள்​ளாரே என கேள்வி எழுப்​பியபோது, “ஆளுநரிடம் தானே கேட்​டார்​கள். என்​னிடம் இல்லையே” என்றார் துரைமுருகன்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT