உள்படம்: சண்முகசுந்தரம்


 
தமிழகம்

அஜித்குமார் வழக்கில் டிஎஸ்பி நீதிமன்றத்தில் ஆஜர்: பிடிவாரன்ட்டை ரத்து செய்து நீதிபதி உத்தரவு

செய்திப்பிரிவு

மதுரை: சிவகங்கை மாவட்​டம் மடப்​புரம் பத்​ர​காளி​யம்​மன் கோயில் காவலாளி அஜித்​கு​மார், தனிப்​படைக் காவலர்​கள் தாக்கப் பட்டதில் உயி​ரிழந்​தார். இந்த வழக்​கில் தனிப்​படைக் காவலர்​கள் 6 பேரை சிபிஐ கைது செய்​தது.

கூடு​தல் குற்​றப் பத்​திரி​கை​யில் மானாமதுரை டிஎஸ்​பி​யாக இருந்த சண்​முகசுந்​தரம், திருப்​புவனம் காவல் ஆய்​வாளர் ரமேஷ்கு​மார், உதவி ஆய்​வாளர் சிவக்​கு​மார், தலை​மைக் காவலர் இளை​ய​ராஜா ஆகியோர் எதிரி​களாக சேர்க்​கப்​பட்​டனர்.

          

பின்​னர், சண்​முகசுந்​தரம் உட்பட 4 பேரும், மதுரை மாவட்ட நீதி​மன்​றத்​தில் ஆஜராக உத்​தர​ விடப்​பட்​டது. இந்த வழக்கு விசா​ரணைக்கு வந்​த​போது சண்​முகசுந்​தரம் ஆஜராக​வில்​லை.

இதையடுத்​து, டிஎஸ்பி சண்​முகசுந்​தரத்​துக்கு எதி​ராக ஜாமீனில் வர முடி​யாத பிடி​வாரன்ட் பிறப்​பித்​து, அவரைக் கைது செய்து மார்ச் 5-ல் ஆஜர்​படுத்த சிபிஐக்கு நீதிபதி உத்தர​விட்​டார்.

இந்​நிலை​யில், டிஎஸ்பி சண்​முகசுந்​தரம் தலை​மைத் குற்​ற​வியல் நீதித்​துறை நடு​வர் செல்​வ​பாண்டி முன்​னிலை​யில் நேற்று ஆஜராகி, பிடி​வாரன்ட்டை ரத்து செய்​யக் கோரி மனு தாக்​கல் செய்​தார். இதையடுத்​து, பிடி​வாரன்ட்டை ரத்து செய்​து, மார்ச் 5-ம் தேதி நீதி​மன்​றத்​தில் ஆஜராக உத்​தர​விட்ட நீதிப​தி, விசா​ரணையை தள்​ளி​வைத்​தா​ர்.

SCROLL FOR NEXT